பழுப்பு நிறப் பக்கங்கள் – 2

மீண்டும் நினைவுறுத்துகிறேன்.  இன்றைய தினம் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும்.

பிரதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் புதிய தலைமுறை இதழில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொடரைப் படித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  இந்த வாரம் சென்னை அஞ்சல் தலைமை அலுவலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.  ராஸ லீலாவின் தொடர்ச்சி…

தினமணி இணைய இதழில் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் இன்று இரண்டாவது கட்டுரை வெளியாகி உள்ளது.  படித்துப் பார்க்கவும்.  படிப்பதோடு நிறுத்தி விடாமல் நான் குறிப்பிட்டுள்ள நூல்களையும் வாங்கிப் படிப்பது நல்லது.  உங்களில் யாரிடமாவது நரசய்யாவின் கடலோடி என்ற நூல் இருந்தால் அனுப்பித் தாருங்கள்.  என்னிடமிருந்த பிரதி ஓசி கொடுத்துப் போய் விட்டது.  புகைப்பட நகல் இருந்தாலும் பரவாயில்லை.  நியூ புக்லேண்ட்ஸில் பணமும் அனுப்பியாயிற்று.  புத்தகம் வரவில்லை.  தொலைபேசியில் கேட்டால் இதோ அதோ என்கிறார்கள்.  படித்து விட்டுத் தந்து விடுகிறேன்.  தினமணி இணைப்பு:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/03/29/%E0%AE%95%E0%AF%81.-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/article2731385.ece