ஐரோப்பாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான தூரம்…

பல அந்நிய மொழிப் பெயர்கள் இங்கே தமிழில் தப்புத் தப்பாகவே உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டு அப்படியே நினைவிலும் தங்கி விட்டன. அதில் ஒன்று, இஸ்தான்புல் என்று தவறாகச் சொல்லப்படும்/எழுதப்படும் இஸ்தம்பூல்.  துருக்கியும் துனீஷியாவும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளை ஒத்த கலாச்சார சாயல்களைக் கொண்டவை.  இஸ்தம்பூல் சென்னையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது.  அதில் ஐரோப்பியப் பகுதியும் ஆசியப் பகுதியும் உண்டு.  இரண்டையும் கடக்க ஃபெர்ரியில் போக வேண்டும். ஐரோப்பிய இஸ்தம்பூல் கிட்டத்தட்ட ஐரோப்பா.   ஆசியப் பகுதி நம் பழைய தில்லி போல.

துருக்கியப் பாடகிகளில் என்னைக் கவர்ந்தவர் ஸர்த்தாப் எரநார் (Sertab Erener).  அவர் பாடும் கீழ்க்கண்ட ஆங்கிலப் பாடலையும் ஆடலையும் நீங்கள் பாருங்கள்.  ஐரோப்பாவுக்கும் துருக்கிக்கும் உள்ள வித்தியாசம் சில செண்டிமீட்டர்கள் தான் என்பதை ஸர்த்தாப் எரநாரின் முழு உடையிலும் அவரை அடுத்துப் பாடும் கிரேக்க அழகியின் அரை உடையிலும் காணலாம்.

https://www.youtube.com/watch?v=axJt-Rw2Urg