Tiga : Bugatti : Totally psychedelic…

இன்றுதான் இவரது இசை எனக்கு அறிமுகம்.  அதாவது பெயர் தெரிந்து.  பெயர் தெரியாமல் இரவு விடுதிகளில், நடன அரங்குகளில் கேட்டு ஆடியிருக்கலாம்.  போதையில் பெயரை யார் கவனிப்பது?  இன்றுதான் பெயர் தெரிந்து கேட்கிறேன்.  அறிமுகப்படுத்தியவர் பாவாணன்.  பாடகரின் பெயர் டீகா.  Tiga.  கனடா நாட்டவர்.  இவர் இசை ஸைக்கடெலிக் ஆக இருக்கிறது.  இமயமலையில் கிடைக்கும் இலையைப் புகைத்தபடி கேட்டால் சொர்க்கம் பார்க்கலாம் போல.  என்னதான் நான் காந்தியவாதியாக மாறி விட்ட போதும் காந்தி கேட்ட ரகுபதியையெல்லாம் கேட்க முடியவில்லை.  டீகா தான் பிடித்திருக்கிறது.  கேட்டவுடனே காதல் கொண்டு விட்டேன்.  அவந்திகா வீட்டில் இல்லாததால் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தேன்.  அவள் கேட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்பாள்.  டீகாவை அறிமுகப்படுத்திய பாவாணனுக்கு நன்றி. டீகா பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் காண்க.

https://en.wikipedia.org/wiki/Tiga_(musician)

பின்வருவது பாவாணனின் கடிதம்:

Hi Charu,

I am not sure you aware about this. TIGA, a half-lunatic, druggy style of visual.  We can inhale the music well if we are in high..  esp. [Ganja]

ACID + corona + half hallucination is this song. Loop  – Loop – Loop  do while … on and on..

I didn’t see much of this type of DJ music in your writing.

Just shared to enjoy….

Paavaanan.

டீகாவின் பாடல்களில் Bugatti தான் ஆகச் சிறந்தது என்று நினைக்கிறேன்.   இது புகாட்டியின் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=CFg6amMLd-o

டீகா மாதிரியான இசையில் Freemasons என்ற பிரிட்டிஷ் பேண்டும் மிகவும் பிடித்திருந்தது.  இது ஃப்ரீமேஸன்ஸின் ஒரு பாடல்:

https://www.youtube.com/watch?v=G7atizv6s5o

இது போன்ற இசை என் எழுத்துக்களில் ஏன் இல்லை என்பதற்கு பதில் ரொம்பச் சுலபம்.  இப்போதெல்லாம் நான் மது அருந்துவதில்லை.  அதனால் பப்-களுக்குப் போவதில்லை.  மது அருந்தியிருப்பவர்களைக் கண்டாலே ஏதோ அருவருப்பாகத் தோன்றுகிறது.  வச்சா குடுமி, செரச்சா மொட்டை.  ஆண்டவா! ஆனால், பாவாணன், இந்த புகாட்டி தருவது போன்ற ஸைக்கடெலிக் தன்மையை என் எழுத்தில் கொண்டு வர முடியுமா என்று முயற்சித்துப் பார்க்கலாம்.  முடியும் என்றே நினைக்கிறேன்.

இந்தத் தேடலில் கிடைத்த இன்னொரு அபூர்வமான பாடகர் Tom Odell.  என்ன ஒரு குரல்!  அவருடைய another love:

https://www.youtube.com/watch?v=4ZHwu0uut3k