என் புத்தகங்கள் மின் புத்தகங்களாக…

எனக்கு புத்தகமாகப் படிப்பதை விட ஐ பேடில் அல்லது கணினியில் படிப்பதே வசதியாக உள்ளது.  அதற்காக ஒரு நண்பர் சமீபத்தில் ஐபேட் வாங்கிக் கொடுத்தார்.  இனிமேலான காலம் மின்நூல் வடிவில்தான் இருக்கும்.  காகிதப் புத்தகங்கள் வழக்கொழிந்தும் விடலாம். என் புத்தகங்கள்  சில மின்நூல்களாகக் கிடைக்கின்றன.  தகவல்:

விண்டோஸ் 8 கணினியிலும், ஸ்மார்ட் ஃபோனிலும் நியூஸ் ஹன்ட்(newshunt)  app டவுன்லோட் செய்து, சாரு நிவேதிதா / charu nivedita என்று தேடினால், சாருவின் புத்தகங்கள் வருகிறது.

விலைப்பட்டியல்: 

 
ஸீரோ டிகிரி – ரூ. 100 (அறிமுக சலுகையாக, தற்பொழுது ரூ.85)
கோணல் பக்கங்கள் 1 – ரூ. 100 (அறிமுக சலுகையாக, தற்பொழுது ரூ.85)
கோணல் பக்கங்கள் 2 – ரூ. 125 (அறிமுக சலுகையாக, தற்பொழுது ரூ.106)
கோணல் பக்கங்கள் 3 – ரூ. 125 (அறிமுக சலுகையாக, தற்பொழுது ரூ.106)
பணம் செலுத்தும் முறை:
OTP (One time password) மூலம் டவுன்லோட் செய்தால், உங்கள் கைப்பேசி balance இலிருந்து புத்தகத்துக்கான பணம் எடுக்கப் படும்.

கடன் அட்டை அல்லது net banking மூலமும் பணம் செலுத்தலாம்.

ஓரிரு நொடிகளில் இவற்றை செய்து விடலாம். பின் read என்பதை அழுத்தி, புத்தகத்தைப் படிக்கலாம்.

மின் புத்தகத்தின் வலது மேல் மூலையில், Aa என்று இருக்கும். அதை அழுத்தினால், Text Size மாற்ற முடியும். Background color உம் மாற்ற முடியும். அதன் அருகில் மூன்று கோடுகள் இருக்கும். அதை அழுத்தினால், index ஐ காண்பிக்கும். எந்த chapter படிக்க வேண்டுமோ, அதை தேர்வு செய்து, அந்தப் பக்கத்துக்குச் செல்லலாம்.

பின்குறிப்பு: 
விண்டோஸ் XP, Vista, 7 ஆகியவற்றில் இந்த மின்னூலைப் படிக்க முடியாது. இந்த கருவிகளிலும் படிக்கும் வகையில் Google playbook இல் சாருவின் புத்தகங்கள் விரைவில் வெளிவரும்.