பழுப்பு நிறப் பக்கங்கள் : எஸ். சம்பத்

இதுவரையிலான என்னுடைய பரந்து பட்ட உலக இலக்கிய வாசிப்பில் எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலுக்கு மிஞ்சிய ஒரு இலக்கியப் படைப்பு இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளேன்.  நான் மட்டும் அல்ல.  சி. மோகனும் அப்படியே அபிப்பிராயப்படுகிறார். இடைவெளி நாவலை விருட்சம் வெளியீட்டில் படித்தால் புரிந்து கொள்ள முடியாது.  அது எடிட் செய்யப்படாத முதல் பிரதி.  தெறிகள் பத்திரிகையில் அப்படித்தான் வந்தது.  அதை சி. மோகன் செவ்வனே செப்பனிட்டு க்ரியா மூலமாக 1984-இல் வெளிவந்தது.  அதன் பிடிஎஃப் பிரதி இணையத்திலேயே கிடைக்கிறது.  அதைப் படிக்கவும்.  ஆனால் அதன் இணைப்பை என்னால் தர முடியாது.  சம்பத்தின் குடும்பத்தினர் அந்த நாவலின் மறு வெளியீட்டுக்கு அனுமதி மறுத்ததாகவும் கேள்விப்பட்டேன்.  அழகியசிங்கர் எப்படிப் பதிப்பித்தார் என்று புரியவில்லை.  ஆனால் அழகியசிங்கரின் விருட்சம் வெளியீட்டைப் படிப்பதை விட இணையத்தில் தேடிப் பிடித்துப் படிப்பதே சிறந்தது.  சம்பத் உலக இலக்கியத்தில் ஆல்பெர் கம்யூவையும் மிஞ்சியவர் என்று எனக்குத் திண்ணமாகத் தெரிகிறது.  இருந்தும் அவரது எழுத்து வெளியாவதற்குத் தடை இருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி இணைப்பு:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/07/05/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-1941-%E2%80%93-1984/article2902290.ece