அன்புள்ள சாரு,
“ஏ பங்காளி…” எனும் theme பாடல், Amores Perros-ல் வரும் “Si Senor” பாடல் வடிவில் இருக்கிறது பாருங்கள். கொஞ்சம் டெம்போ மட்டும் குறைவு. மற்றபடி அந்த வெறிபிடித்த நாயின் அதே குரல்…
“ஏ பங்காளி…”
“Si Senor”
பிரபு
சந்தோஷ் நாராயணனிடம் ஒளிவு மறைவு இல்லை. தான் எடுப்பதையும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார். பழக்கத்திலும் eccentricity-யிலும் சந்தோஷ் நாராயணனை கிட்டத்தட்ட சந்திர பாபுவுடன் ஒப்பிடலாம். சினிமாவில் இப்படிப்பட்ட கலைஞர்களின் வரவு வெகு அரிதாகவே நிகழ்கிறது. மீண்டும் சொல்கிறேன். தமிழர்களின் சினிமா இசை ரசனையை மாற்றுவதில் சந்தோஷ் நாராயணனுக்குப் பெரும் பங்கு இருக்கும்.