பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற ஆயிரம் பக்க நாவலின் பத்து பக்கங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை என்று எழுதியிருந்தேன். இவ்வளவுக்கும் அது ஒரு தமிழ் நாவல். ஆனால் அதே அளவில் உள்ள the story of my assassins நாவலை வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது அந்த நாவல். இவ்வளவுக்கும் ஆங்கிலம் எனக்கு அந்நிய மொழி. அதிலும் assassins நாவல் மிகக் கடுமையான ஒரு ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறது. ஒரு வாக்கியத்தில் ஏதாவது ஒரு வார்த்தையாவது எனக்குப் புரியாத, நான் கேள்விப்பட்டிராத வார்த்தை வருகிறது. இவ்வளவு தடைகள் இருந்தும் அந்தப் புத்தகத்தை என்னால் கீழே வைக்க முடியவில்லை. இப்போது pungi என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடிக் கொண்டிருந்த போது அந்த நாவலிலிருந்து ஒரு அத்தியாயமே ஒரு இணைய தள பத்திரிகையில் வந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த அத்தியாயத்தை நீங்களும் படித்துப் பாருங்கள். guernica என்பது அந்தப் பத்திரிகையின் பெயர்.
http://www.guernicamag.com/fiction/from-the-story-of-my-assasins/
Comments are closed.