ஷோபா சக்தியின் இச்சா படித்தேன். தமிழின் பத்து முக்கியமான நாவல்களில் இச்சாவும் ஒன்று என நிச்சயமாகச் சொல்வேன். இது பற்றி விரைவில் விரிவாக எழுதுவேன். இதுவரையில் அவர் எழுதிய நாவல்கள் அனைத்தும் இதை எழுதுவதற்கான பயிற்சியோ என்று தோன்றும் அளவுக்கு ஒரு அற்புதமான நாவல் இச்சா. ரசித்து ரசித்துப் படித்தேன்.
நாவலில் ஒரு இடம் வருகிறது:
மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் என் உடல் எழுத்துகளாகவும் ஆன்மா அசப்பியக் குறிகளாகவும் வடிவம் கொள்கின்றன. அன்பும் வெறுப்பும் காதலும் கோபமும் காமமும் அச்சமும் துக்கமும் பொறாமையும் வாதையும் வலியும் எல்லாமே பேச்சாகவும் கதையாகவும் மாறும் போது அவை நமக்குப் பரவசத்தையும் கிளர்ச்சியையுமே ஊட்டுகின்றன. ஒருவரின் கதையில் காணப்படும் இரத்தமும் மரணமும் கூட நமக்குப் பரவச நிலையையே தருகின்றன.
கண்டி அரசன் கூத்தில் மந்திரி பெண்சாதி தன்னுடைய பச்சிளங்குழந்தையை உரலில் போட்டு உலக்கையால் இடித்தவாறு அழுது புலம்பிப் பாடும்போது, பரவசம் அடையாமலா அதை மறுபடியும் மறுபடியும் காலங்காலமாக மக்கள் திருவிழாக்களில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாவல் கிடைக்கும் இடம்: புத்தக விழா அரங்கு 306 & 307கருப்புப் பிரதிகள் போன் 94442 72500