நான் புத்தக விழாவுக்கு வர முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே உங்கள் புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வரலாம். என் வீட்டைக் கண்டு பிடிப்பது மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி. கட்டிடத்தைக் கண்டு பிடிப்பதைப் போல. சாந்தோம் ஹை ரோடில் ஒரு பிரபலமான ஷோரூமின் மாடியில் இருக்கிறது என் அபார்ட்மெண்ட். எனக்கு ஒரு மெயில் போட்டால் முகவரியும் போன் நம்பரும் அனுப்புகிறேன். மாலை நான்கு மணியிலிருந்து எட்டரைக்குள் வந்தால் நலம். போன் நம்பரில் குட் மார்னிங் போன்ற உலக மகா மெஸேஜ்களை மட்டும் தவிர்த்து விடுங்கள். சிலர் இதற்காக என்னைப் பலவாறு திட்டியிருக்கிறார்கள். ”குட் மார்னிங் அனுப்பினால் திருப்பிச் சொல்லும் நாகரீகம் கூட இல்லையா, இந்த அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத நீங்கள் என்ன எழுத்தாளர்? இங்கே எங்கள் நாட்டில் உள்ள எழுத்தாளர்களெல்லாம் இவ்வளவு திமிர் பிடித்தவர்கள் இல்லை” என்று அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகி என்னைத் திட்டியிருக்கிறார். அதனால் அவரை போனில் ப்ளாக் செய்யும் நிலை வந்தது. அதை விடுங்கள். உங்களுக்குக் கொஞ்சம் நேரம் மட்டும் இருந்தால் என் வீட்டுக்கு வந்தால் கையெழுத்திட்டுத் தருகிறேன். இடம் கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் போன் செய்யுங்கள். வழி சொல்கிறேன்.
charu.nivedita.india@gmail.com