எனக்குப் பிடித்த கவிஞர்

சமயவேல்.  சிறுபத்திரிகை எழுத்தாளர்களிடம் மட்டுமே பிரபலமான பெயர்.  எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி காற்றின் பாடல்.  இந்த ஒரு தொகுதி மூலமே பரவலான கவனிப்பைப் பெற்றவர்.  இவரது தளம்: http://samayavel.blogspot.in/

இன்று ஒன்று நன்று

விகடனின் ‘இன்று ஒன்று நன்று.’ ஜூலை 9 முதல் ஜூலை 15 வரை, 044-66802911 என்ற எண்ணுக்கு அழைத்தால், அடியேன் பேசுவதைக் கேட்கலாம்.  புகைப்படத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருக்குக் கீழே இருப்பது Zorro.  பக்கத்தில் இருப்பது நான்.  புகைப்படம்: விகடன் புகைப்படக் கலைஞர்: தி. குமரகுருபரன் http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108082

காலம் காலமாகக் கேட்ட குரல்

டியர் சாரு, என் நீங்கள் ரெமி மார்டினை வாங்கி விற்று காசை பெற்று இருக்க கூடாது….ஒரு சின்ன வழி கூட தெரியாமல் நீரும் ஜெயமோஹனும் சமூகத்துக்கு அறிவுரை செய்ய கிளம்பி விடுகிறீர்கள் . கேட்டால் இருவரும் ராக்கெட் செய்வது எப்பிடி என்று வகுப்பு எடுப்பீர்களா? எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்த மேதை என்ற முட்டாள் நினைவை முதலில் ஒழித்து விடுங்கள். எழுத்தாளர்களின் எழுத்துக்கு முன்னும் இந்தியா இப்பிடித்தான் இருந்தது இப்போதும் இப்பிடித்தான் இருக்கிறது. இப்போது இந்தியா அடைந்திருக்கும் … Read more

ரகசிய சிநேகிதம்

செல்வகுமார் முகநூலில் எழுதியிருப்பது: சாரு, அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரையை படித்தபோது நீங்கள் எழுதிய கருத்தே எனக்கும் தோன்றியது. ஒரு எழுத்தாளனை வாசகனாக நெருங்கும்போது அபிலாஷ் எவ்வளவு இனிமையாக மாறிவிடுகிறார். கதை, கட்டுரை என்று எழுதும்போது மட்டும் துருபிடித்த பிளேடால் வாசகனை பிராண்டி விடுகிறார். வேடிக்கைக்காக நீங்கள் யாரிடமும் பேசுவதில்லை என்று சொல்கிறீர்கள். உண்மையில் உங்கள் பழைய சாருஆன்லைன் கடிதங்களில் இருந்தும், எழுத்தில் வெளிப்படும் கச்சிதம் + கண்டிப்புத் தன்மையால் உங்களை நெருங்க, எழுத முயற்சிக்கும் எழுத்தாளர்கள் வருவதில்லை. … Read more

நாட்டு நடப்பு (2)

இந்த நண்பரின் எழுத்தை நம்மால் எந்தக் காலத்திலும் ரசிக்கவே முடியாது என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களில் முதல் இடம் ஆர். அபிலாஷுக்குத்தான்.  விநாயக முருகனுக்கு இரண்டாம் இடமே.  ஆனால் அந்தப் பாவி மனுஷன் அபிலாஷ் என் நம்பிக்கையை ஐந்தே நிமிடத்தில் உடைத்து எறிந்து விட்டார்.  அவருடைய மிக நெகிழ்ச்சியான கட்டுரை ஒன்றைப் படித்த போது இப்படியும் எழுதக் கூடியவரா இவர், அல்லது ஆங்கிலத்தில் எழுதி யாரோ ஒருவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று சந்தேகப்பட்டு கட்டுரையின் கீழே ரொம்பத் … Read more

தமிழ் ஸ்டுடியோ – பாலு மகேந்திரா விருது விழா – அடியேனின் பேச்சு

நேற்று நடந்த பாலு மகேந்திரா விருது வழங்கும் விழாவில் என் நண்பர்களையும் வாசகர் வட்ட நண்பர்களையும் எதிர்பார்த்தேன்.   பிச்சைக்காரனைத் தவிர வேறு யாரையும் காணோம்.  எப்போதும் உள்ளதுதான் என்பதால் ஏமாற்றம் இல்லை.  ஆனால் ஆச்சரியமாக இருந்தது.  எப்படித் தனக்குப் பிடித்த எழுத்தாளனின் பேச்சைக் கேட்க விருப்பம் இல்லாதிருக்கிறார்கள் என.  பிச்சை என் பேச்சைக் குறிப்பெடுத்து அவருடைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். http://www.pichaikaaran.com/2015/05/blog-post_25.html order custom essay online