புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (8) : Fuck

வார்த்தைகளில் எனக்குக் கெட்ட வார்த்தை, நல்ல வார்த்தை என்று எதுவும் கிடையாது.  என் 30-ஆவது வயதில் ஒரு கருத்தரங்கில் Germaine Greer நடத்திய CUNT என்ற பத்திரிகையிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன்.  பெண்கள் தமது யோனியைக் கொண்டாட வேண்டும் என்பது க்ரேரின் கோட்பாடு.  அவருடைய The Female Eunuch என்ற நூலை உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.  பின்னால் இருப்பது ஜெர்மெய்ன் க்ரேர் பெருமையாகக் கொடுத்த அவருடைய புகைப்படம்.  மேலும் அவரைப் பற்றிய, அவர் எழுதிய … Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புக் பாயிண்டில்

  நான்கு ஸ்டார் மேடைப் பேச்சாளர்கள் உள்ளனர்.  அதனால் எனக்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது.  தமிழச்சியும் தமிழ்ச் செல்வனும் பிரமாதப்படுத்தி விடுவார்கள்.  கிடைக்கக் கூடிய ஐந்து நிமிடத்தில் மனுஷ்ய புத்திரனின் நற்பண்புகளைப் பற்றிப் பேசி சமாளித்து விடலாம்.

தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா : அடியேன் உரை : பிச்சைக்காரன்

தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா நேற்று நடந்தது.  வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வராதது பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும், அவந்திகாவின் ஆன்மீக அமைப்பிலிருந்து ஒரு நண்பரும் வந்திருந்தனர்.  பின்வரும் இணைப்பில் நான் பேசிய பேச்சு பிச்சைக்காரன் எடுத்த குறிப்பில் வந்துள்ளது.  இன்றைய தி இந்துவில் என் பேச்சின் ஒரு பகுதி விளக்கமாக வந்துள்ளது.  பார்க்கவும். http://www.pichaikaaran.com/2014/12/blog-post_23.html

புதிய எக்ஸைல் பற்றி நிர்மல், பிச்சைக்காரனிடம்…

புதிய எக்ஸைலை மென்பிரதியாகப் படித்தவர்களில் நிர்மலும் ஒருவர்.  அது பற்றி அவர் எழுதிய கடிதங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன்.  ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  இல்லாதவர்கள் பின் தேதிகளில் தள்ளிப் போய்ப் படிக்கலாம்.  நாவலில் சில பிழைகளையும் சுட்டிக் காட்டினார்.  அவை சரி செய்யப்பட்டு விட்டன.  இப்போது பிச்சைக்காரனிடம் புதிய எக்ஸைல் படிப்பது ஒரு விஷுவல் அனுபவம் போல் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  அது சரி என்றே எனக்கும் தோன்றுகிறது.  மற்றும் அவரது அபிப்பிராயங்களை பிச்சைக்காரன் தொகுத்திருக்கிறார்.  படித்துப் பாருங்கள்… … Read more