அம்மா உணவகமும் கிழக்கு பதிப்பகமும்…

சில நண்பர்கள் முன்பதிவுத் திட்டத்தைக் கிண்டல் செய்வதாக எண்ணிக் கொண்டு சில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.  அதாவது, விலையை அதிகப்படுத்தி விட்டு முன்பதிவில் பாதி விலைக்குத் தருகிறார்களாம்.  தயவு செய்து பின்வரும் வார்த்தைகளுக்காக பத்ரி என்னை கோபித்துக் கொள்ளலாகாது.  என்னைப் பொறுத்தவரை கிழக்கு பதிப்பகத்தில் அம்மா உணவகம் மாதிரிதான் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள்.  பழைய எக்ஸைல் 440 பக்கம்.  அதன் விலை என்ன இருக்க வேண்டும்?  600 ரூபாய் இருக்கலாம்.  அப்படி இருந்தால்தானே என்னைப் போன்ற ஏழை … Read more

ஒரு நாவல் ஒரு லட்சம் பிரதிகள்…

பின்வரும் இணைப்பில் புதிய எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டம் பற்றி வெளிவந்த சத்யம் தொலைக்காட்சி செய்தியைக் காணலாம். https://www.youtube.com/watch?v=QytbhYLnMcE&feature=youtu.be     e

ஒரு நாவல் ஒரு ரூபாய்!!!

நண்பர்களும் நம் இலக்கியச் சூழலும் புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டத்தின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டார்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.  ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்களுக்கு  இப்படி முன்பதிவுத் திட்டம் இருந்து வருகிறது.  தமிழிலும் இருக்கிறது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள்.  அதெல்லாம் 500 ரூ புத்தகம் 400 ரூ.க்குக் கிடைக்கும் முன்பதிவு.  உண்மையான அர்த்தத்தில் அதற்குப் பெயர் முன் பதிவுத் திட்டம் அல்ல.  அது சலுகை விலை.  நீங்கள் கவனித்திருக்கலாம்.  செய்தித்தாள்களில் சில நேரங்களில் முழு பக்க … Read more

புதிய எக்ஸைல் பற்றிய செய்தி

  புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் பற்றியும், புதிய எக்ஸைல் பற்றியும் என்னுடைய செய்தி ஒன்று இன்றைய சத்யம் தொலைக்காட்சியின் காலை ஏழரை மணி செய்தியிலும் பிறகு இன்று முழுவதும் இடம் பெறும் செய்திகளிலும் வெளிவர இருக்கிறது.  

ஊர் கூடித் தேர் இழுப்போம்!

  சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களில் மட்டுமே கையெழுத்திடுவார்கள்.  ஆனால் நான் அப்படி எந்த நிபந்தனையும் வைத்துக் கொண்டதில்லை.  பலருக்கும் டயரி, நோட்டுப் புத்தகம், துண்டுச் சீட்டு என்று எதையும் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.   இனிமேல் அப்படிச் செய்வதாக இல்லை.  ஒரு கையெழுத்துக்கு 5000 ரூ.  கொடுத்தால் மட்டுமே கையெழுத்து.  இதை நான் சேத்தன் பகத்திடமிருந்தே தெரிந்து கொண்டேன்.  அவருடைய புத்தகம் இரண்டே வாரத்தில் 20 லட்சம் விற்றிருக்கிறது.  ராயல்டி நாலு கோடி கிடைக்கும்.  … Read more

புதிய எக்ஸைல் : நேசமித்ரன் வாழ்த்து

முகநூலில் எழுதுபவர்களின் தமிழைப் பார்க்கும் போதெல்லாம்  நான் துக்கம் கொள்வதுண்டு.  தமிழ் இனி செத்துப் போகும் என்று நண்பர்களிடம் புலம்புவதுண்டு.  ஆனாலும் பாரதியும், மௌனியும், நகுலனும், தர்மு சிவராமுவும் கொடுத்த பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சமகாலத் தமிழ் எழுத்தை நான் அதிகம் வாசிப்பதில்லை.  வாசிக்க விரும்புவதும் இல்லை.  நான் தமிழில் எழுதினாலும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு மத்தியில் சென்று விடவே விரும்புகிறேன்.  ஓரளவு அந்த முயற்சியில் வெற்றியும் கிட்டி விட்டது.  ராஸ லீலா … Read more