இமயமலைப் பயணக் குறிப்புகள்: நாள் ஐந்து : கணேஷ் அன்பு

இணையத்தில் ஒருவர் இமயமலைப் பயணக் குறிப்புகள் என்ற பெயரில் கூகிளில் உள்ளதையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.  மொழிபெயர்ப்பும் நல்ல காரியம்தான்.  ஆனால் வரிக்கு வரி தகவல் பிழைகள்.  யாராவது திருச்சி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என்று எழுதுவார்களா?  அவர் ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தோம் என்று எழுதுகிறார்.  அதோடு இந்திய எல்லையையும் கன்னாபின்னா என்று மாற்றுகிறார்.  அப்படியில்லாமல் கணேஷ் அன்புவின் பயணக் குறிப்புகள் authentic ஆக உள்ளன. http://anbueveryone.blogspot.in/2013/09/5_28.html

கடவுளின் முன்னே மனிதனின் கீழ்மை

’உத்தமத் தமிழ் எழுத்தாளர்’ சொல்லும் பொய்களுக்கும் செய்யும் ஏமாற்று வேலைகளுக்கும் அளவே இல்லாமல் போய் விட்டது.  இமயமலையைப் பார்த்த போது எங்கள் குழுவில் இருந்த அத்தனை பேரும் சொல்லையும் செயலையும் இழந்து கடவுளின் முன்னே நிற்பது போல் உணர்ந்தோம்.  நானோ அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். ஜிஸ்பா என்ற இடத்தில் சுமார் முப்பது குடும்பங்கள் இருந்தன.  அங்கேயும் மூச்சு விட சிரமம்தான்.  ஒரு பெண் என்னைப் பார்த்து எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.  உடனே பக்கத்திலிருந்த  … Read more

இமயமலைப் பயணக் குறிப்புகள் : அன்பு

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த கணேஷ் அன்பு இமயமலைப் பயணக் குறிப்புகளை எழுதத் துவங்கி விட்டார்.  எக்ஸைல் வேலையில் நான் மூழ்கிக் கிடப்பதால் அதை எழுத முடியாமல் இருந்தது.  கணேஷ் என் சுமையைக் குறைக்கிறார்.  அவர் எழுத விட்டதை நான் எழுத முயல்கிறேன்.  இன்னும் இரண்டு நாளில் எக்ஸைலை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  எனக்கு யாரையும் அன்பு, பாசம், அறிவு, நட்பு, தமிழ், விடுதலை, புரட்சி, தியாகம், சுதந்திரம், அழகு என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்க … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)

நினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது.  அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா?  அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார்.  எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.  அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன்.  அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன்.  உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார். thanks for your view … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்?

அராத்துவின் பையன் பெயர் ஆழிமழைக் கண்ணன்.  இப்படியெல்லாம் பெயர் வைக்காதீர்கள் என்று எவ்வளவோ மன்றாடினேன்.  அவர் கேட்கவில்லை.  தாஸ்தாயேவ்ஸ்கி, ப்யூகோவ்ஸ்கி, போர்ஹேஸ் என்றெல்லாம் வெளிநாட்டுக்காரன்கள் பெயர் வைக்கிறார்கள்.  அதை நம் ராமகிருஷ்ணன், போர்ஹே, தாஸ்தாவேஜ்ஸ்கி என்று உச்சரிக்கும் போதுஎவ்வளவு கோபப்படுகிறீர்கள்.  Jodorovsky என்ற பெயரை ஹொடரோவ்ஸ்கி என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று எங்களையெல்லாம் எவ்வளவு டார்ச்சர் செய்தீர்கள்…  அதே போல் அவன்களும் என் மகன் பெயரை ஆழிமழைக் கண்ணன் என்று சொல்லட்டும் என்றார் அராத்து. அது சரி, … Read more