இமயம் (12)

சாரு..இசையைரசியுங்கள்…வேண்டாம்என்றுசொல்லவில்லை.. ஆனால்தயவுசெய்துஇப்படிபகிராதீர்கள்… நீங்கள்செய்வதைஎல்லாம்தானும்செய்ய முயன்றுபார்க்கும்உங்கள்தலைமைச்சீடரான உத்தமத் தமிழ் எழுத்தாளர், இமயமலைப்பயணம்மேற்கொள்ளபோகிறாராம்…அதுஅவரது தனிப்பட்ட விஷயம்… பரவாயில்லை.. ஆனால்இசையைப்பற்றிநீங்கள்எழுதவதைப்பார்த்து , அவரும்இசைகளின்வழியேஎன்றோஅல்லது இசையின்ஊடாகதத்துவதரிசனம்என்றோஎழுதஆரம்பித்தால்தமிழகம்தாங்காது… பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சை, என்னுடைய தலைமைச் சீடரை நான் அங்கீகரிக்கவில்லை.  சகுனி யாரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.  உ.த.எ.வுக்கு இயங்கு சக்தியாக இருப்பதே என் எழுத்தும் செயலும்தான் என்கிற போது சந்தோஷம்தான் ஏற்படுகிறது.  ஆனால் பரிதாபமும் ஏற்படுகிறது.  என்னென்னவோ கண்றாவி கதைகளைப் படித்துக் கொண்டு, எங்கெங்கோ போய் தங்கியதற்கான அறை … Read more

இமயம் (11)

சில புகைப்படங்கள் மட்டும் இப்போது.  இவை பற்றி நாளை எழுதுகிறேன்.  புகைப்படங்கள்: கணேஷ்.இதில் கூடாரங்கள் இருக்கும் இடம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.  இது தான் லஹௌல் பகுதியின் மரண வெளி.  இங்கே ஒரு இரவு தங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  நாங்கள் இங்கே ஒரு இரவும் ஒரு பகலும் தங்கினோம்.

இமயம் (8)

        இந்தப் புகைப்படங்கள் மூன்றும் கணேஷ் அன்பு எடுத்தவை.  இந்தப் புகைப்படங்களின் மேல் க்ளிக் செய்தால் பெரிய அளவிலும் பார்க்கலாம்.  கணேஷ் அன்புவுக்கு என் அன்பு.   மூன்றாவது புகைப்படம் Pangong Lake.  இரண்டாவது புகைப்படம் லே செல்லும் வழி…

இமயம் (7)

Pangong lake காலை ஆறு மணி இருக்கலாம்.  அரை மணி நேர தியானத்தில்.  அடுத்த படம்; இமயம் தொடங்குவதிலிருந்து மணாலி வரை எதிர்த் திசையில் வந்து கொண்டிருக்கும் நதி ப்யாஸ்.  பிறகு  ரோதாங் பாஸ்-இலிருந்து தண்டி(Tandi) வரை  வருவது சந்திரா நதி.  அதன் பின் தொடர்வது பாகா (Bhaga). பாராலாச்சா / சார்ச்சுவில் பாய்வது யூனம்(Yunam). லடாக்கில் நுழையும் போது குறுக்கிடுவது ‘இண்டஸ்’ (Indus).   நான் அராத்துவின் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டது இந்த … Read more

இமயம் (6)

இந்தப் புகைப்படங்கள் மூன்றும் நவீன் குமார் எடுத்தது.  இவர் எங்கள் இமயமலை குழுவில் இல்லை.  வாசகர் வட்ட நண்பர்.  இவரும் மணாலியிலிருந்து லே வரை மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.  இவர் Nikon D90 கேமராவில் எடுத்த புகைப்படம் இது. பின்வருவது அவர் வட்டத்தில் எழுதியது…   ”ரொதாங்கைத் (Rohtang Pass) தாண்டினால் மழை அவதியில்லை என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மழை பெய்தால் ரொதாங்கைக் கடப்பதே சிரமம். சாலை முழுக்க சகதியாகத்தான் இருக்கும்.  தெறிக்கும் சகதியல்ல…  பாதி வண்டியை … Read more