புத்தக விழா – 2

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவில் உள்ள Writers Corner என்ற அரங்கில் என்னுடைய படைப்புகள் பற்றி அறிமுகம் செய்து உரை ஆற்றுகிறார் காயத்ரி. நானும் பேசுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

எழுபத்தைந்து பிரம்படி பட்ட எழுத்தாளன்

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஏகப்பட்ட கடிதங்கள் திக்குமுக்காடச் செய்து விட்டன. இனிமேல் எழுத்தாளன் அனாதை என்று சொல்ல மாட்டேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2006-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஃப்ரான்ஸில் உள்ள துலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் லூர்து என்ற சிறிய கிராமத்தில் உள்ள பெர்னத் அன்னையின் எதிரே மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததை ஒருபோதும் மறக்க இயலாது. … Read more

இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…

நான்கைந்து நாட்களாக நாகேஸ்வர ராவ் பூங்காவில் தனியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.  ராகவன் வெளியூர் போய் விட்டார்.  அப்படித்தான் சொல்லுவார்.  எந்த ஊர் என்று சொல்ல மாட்டார்.  நானும் கேட்க மாட்டேன்.  ஆனால் மனசுக்குள் நினைத்துக் கொள்வேன், இதெல்லாம் மகா பெரிய ராணுவ ரகசியம் போல என்று.  ஆனால் இன்னொரு நண்பர் இதை விட பயங்கரம்.  சாய்ந்தரம் சந்திப்போமா என்று போன வாரம் கேட்டேன்.  நான் ஊர்ல இல்லியே சாரு என்றார்.  ஆஹா ஆஹா என்று மனசு குதியாட்டம் … Read more

சி.சு. செல்லப்பா

முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் மொத்தமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் தொகுப்பாக வந்துள்ளது. இதை ஒவ்வொரு தமிழரும் … Read more

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்

மேற்கண்ட நூல் இன்னும் சுமார் 15 தினங்களில் அல்லது அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் உங்கள் கைகளில் கிடைக்கும். இப்போது பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். Ulrike Ottinger என்று ஒரு ஜெர்மானிய இயக்குனர் இருக்கிறார். இவரைப் பற்றி சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. இந்த நூல் என் சினிமா பற்றிய எழுத்துக்களில் மிக மிக முக்கியமானது. இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமானால் ஒட்டிஞ்ஜரின் படங்களைப் … Read more

பணிந்தாயே!

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் 25 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா, அப்படியான காலகட்டம் இப்போது எனக்கு. அத்தனை வேலைகள். அத்தனை வேலைகளுக்கு நடுவே நண்பர் கமல் வேறு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். கடுப்பாக இருக்கிறது. ஆனால் கமல் கொடுத்த வேலையை மறுக்க முடியுமா? கமல் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என்றால் நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள். தெரியும். அவருடைய மகாநதி, குணா, சதிலீலாவதி, உத்தம வில்லன் … Read more