மௌனமும் பேச்சும்…

நேற்று ஜெயமோகனோடு பேசினேன். கோவை விழாவுக்கு அழைத்தேன். வருவதாக உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் கருத்து முரண்பாடுகள் என்று சொல்ல மாட்டேன். அவர் வட துருவம்; நான் தென் துருவம். இருவரும் இரண்டு வெவ்வேறு கருத்தியல்களையும் அழகியல் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இது எங்கள் இருவருக்குமே தெரியும். இருந்தாலும் அது எங்கள் நட்பை ஒரு போதும் பங்கம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு ரத்த உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. அதாவது, யாரோடும் தொடர்பிலேயே … Read more

புரியாத விஷயம்…

கோவையில் நடக்கும் கண்ணதாசன் விருது வழங்கும் விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  15, 16, 17 ஆகிய மூன்று தினங்களும் கோவையில் விஜய் பார்க் இன் ஓட்டலில்தான் தங்கியிருப்பேன்.  அதற்கு முன்னால் ஒருசில வார்த்தைகள். சமீபத்தில் நண்பர்களுடன் சவேரா மூங்கில பாருக்குப் போயிருந்தேன்.  முன்பெல்லாம் அது என் வாசஸ்தலங்களில் ஒன்று.  மதியம் போனால் இரவு பதினோரு மணிக்குத்தான் கிளம்புவேன்.  இப்போது மதுவை நிறுத்திய பிறகு அந்த பாருக்கு பத்தடி முன்னால் உள்ள மால்குடி உணவகத்தோடு நிறுத்திக் கொள்வது.  … Read more

கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை

தண்ணீர்

கடந்த முப்பது ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.  சென்னையில் வசிக்கிறேன் என்று பேர்தானே தவிர ஒவ்வொரு ஊருக்கும் உரிய ஏராளமான குணாம்சங்களோடு சென்னையை நான் அறிந்தவன் அல்ல.  சென்னையை விட எனக்கு தில்லி நன்றாகத் தெரியும்.  தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு அத்துப்படி.  அதற்குக் காரணம், தில்லியின் நான்கு மூலைகளிலும் நான் வசித்திருக்கிறேன்.  கிழக்கு மூலையான கல்யாண்வாஸ், கல்யாண்புரி, திர்லோக்புரியின் (ஞாபகம் இருக்கிறதா?) எதிரே உள்ள மயூர் விஹார், மேற்கு மூலையான பொஸங்கிப்பூர், ஜனக்புரி, தெற்குப் பகுதியான … Read more

தலைமுறைகள்…

மேற்கண்ட இணைப்பில் லவ் ஷாட் என்ற பாடலைப் பற்றியும் கே.பாப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?  அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பு வந்தவுடனேயே அராத்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார்.  அந்தப் பாடல் தொடங்கிய அடுத்த கணம் அவர் மகள் இமையா – வயது 12 – ஆ, எக்ஸோ என்று சொன்னாளாம்.  உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் தென் கொரிய இசைக் குழு எக்ஸோ.  எக்ஸோவின் பாடல்தான் லவ் ஷாட்.  இப்படியாகத்தான் நான் இளைஞர்களோடு சிறுவர்களோடு தொடர்பு கொள்கிறேன்.  … Read more