பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 3)

சு.ரா.வினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுதப் போகவில்லை. போனால் பல குப்பைகளை நான் உலக கிளாசிக் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். பொய் சொன்னால் நான் ஜகுவார் காரில் போகலாம். ஆனால் தூக்கம் வராதே? அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தைக் கற்பித்தார். இந்த இரண்டு ஆசான்களையும் நான் வணங்குகிறேன். http://bit.ly/1VFWyIP

இறைவி விமர்சனம்?

இறைவி விமர்சனம் எங்கே என்று பத்து இருபது பேர் மின்னஞ்சல்.  இறைவியை மலக் கிடங்கு என்று சொன்னதால் அடிப்பேன் உதைப்பேன் என்ற மிரட்டல் பல.  தமிழ்நாட்டில் நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கலாம்; ஜெயலலிதாவை விமர்சிக்கலாம்.  ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை விமர்சித்தால் அடி உதைதான் கிடைக்கும்.  அல்லது, அதற்கு சமமான ஏச்சு பேச்சுகள் மிரட்டல்கள் கிடைக்கும்.  ஏனென்றால் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம். ஏஷியாநெட் மின்னிதழில் நான் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம்.  அந்த இதழில் சினிமா … Read more

இறைவி

கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது.  இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன்.  ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன்.  மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்.