புத்தகம் பேசுது : பிரபு காளிதாஸ் நேர்காணல்

இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி.  இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார்.  (அவருக்கு போதையே ஏறாதே?  என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.)  இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை.  இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது.  ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more

இறைவி : கருந்தேள் ராஜேஷ்

இறைவி படம் பற்றி ஒரு ஆஸ்திரேலியா தமிழ் வானொலியில் என்னைப் பேட்டி எடுத்தார்கள். கேள்விகள் அந்தப் படத்துக்கு சார்பாக இருந்தாலும் என்னை மேலும் பேச வைப்பதாக இருந்தது. ஏன் அந்தப் படத்தைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருந்தது என்று அதில் விரிவாகப் பேசியிருக்கிறேன். செல்வி என்ற பெண் பேட்டி எடுத்தார். பேட்டியை மிகவும் அறிவார்த்தமாகக் கொண்டு சென்றார். நாளை ஒலிபரப்பாகும் என்று சொன்னார். எப்படியும் இறைவி இயக்குனர் வெற்றி அடைந்து விட்டார். ஒரு மொக்கை படத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமான … Read more

இறைவி விமர்சனம் முழுமையாக…

இறைவிக்கு இதற்கு முன்பு எழுதிய விமர்சனம்: http://charuonline.com/blog/?p=4569 கார்த்திக் சுப்பராஜின் ’ஜிகிர்தண்டா’ வித்தியாசமான கமர்ஷியல் சினிமாவாக இருந்ததால் ’இறைவி’ வெளிவந்த முதல்நாளே போய்ப் பார்த்தேன்.  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கை காலைக் கட்டி செப்டிக் டாங்க்கில் போட்டு விட்டது போல் இருந்தது.  இது ஒரு மோசமான படம் என்றால் கூட வெறுமனே கடந்து போய் விடலாம்.  ஆனால் தமிழ்நாட்டுக் கலாச்சார அவலத்தின் குறியீடாக, மதிப்பீடுகளின் வீழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது ’இறைவி’. அருள் (எஸ்.ஜே. சூர்யா)  ஒரு சினிமா … Read more

நுழைவுச் சீட்டு

  நான் புத்தக விழாவுக்குச் செல்வது புத்தகம் வாங்க அல்ல.  நான் தேடும் புத்தகங்கள் சர்வதேசப் புத்தக விழாக்களில்தான் கிடைக்கும்.  மற்றபடி என் வீட்டுக்கு மிக அருகில் உள்ள உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, நற்றிணை பதிப்பகங்கள் மூலமே எனக்கு வேண்டிய தமிழ் நூல்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன்.  நண்பர்களும் ஆன்லைன் மூலம் வாங்கித் தருகின்றனர்.  நான் தினந்தோறும் புத்தக விழாவுக்குச் செல்வது என் நண்பர்களைப் பார்ப்பதற்கும் வாசகர்களுக்குக் கையெழுத்துப் போடுவதற்காகவும்தான். ஒருநாள் டிக்கட் வாங்கப் போனேன்.  500 ரூபாய்க்கு … Read more

அந்திமழை

இம்மாத அந்திமழை அச்சு இதழில் தன்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டங்கள் பற்றி சாருவின் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்