Day 75

அன்புள்ள சாரு, உங்களின் வாழ்வை மாற்றியதாகவும் மேலும் சே குவேராவை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியவருமாகிய நீங்கள் இன்று ஒரு பதிவு செய்தால் நான் மிகவும் மகிழ்வேன். Bolivian Diary புத்தகத்தை நீங்கள் Delhi defence -ல் வேலை செய்த பொழுது படித்ததையும், அந்த புத்தகம் தற்போது கிடைப்பதில்லை என்பதையும் எக்ஸைலில் படித்து அறிந்த பின்னர், நான் உங்களிடம் தானே ஏதாவது அறிய செய்தியை கேட்க முடியும் டாக்டர்.அயெந்தேவின் பதிவினைப் போன்று. Battle of chile பார்த்துக் கொண்டிருக்கிறேன். … Read more

டாக்டர் அயெந்தே உங்கள் இல்லத்துக்கு வந்திருக்கிறாரா?

நேற்று தமிழ் ஸ்டுடியோஸ் அருணின் மாணவர்கள் மூன்று பேர் என்னைப் பேட்டி கண்டார்கள்.  ஒளிப்பதிவு செய்யப்பட்டது.  மொத்தம் நான்கு மணி நேரம்.  இப்படி ஒரு பேட்டியை நான் இதுவரை கொடுத்ததில்லை.  இனிமேலும் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.  காரணம், அந்த அளவுக்கு என்னை வாசித்திருந்தார்கள்.  அவர்கள் தென்னமெரிக்க நாடுகள் பற்றிக் கேட்ட போது என் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன.  ஏன் கலங்க வேண்டும்?  40 ஆண்டுக் காலமாக தொலைதூரத்தில் இருக்கும் தன் தாயைக் காணாத ஒருவனின் … Read more

தினம் ஒரு புத்தகம்

தினம் ஒரு புத்தகம் என்று கடந்த 66 தினங்களாக அதன் அட்டையை மட்டும் முகநூலில் கொடுத்து வருகிறேன்.  பல நண்பர்கள் இந்தப் புத்தகங்களை வாங்குகிறார்கள்; படிக்கிறார்கள்.  இதற்குக் காரணமாக இருந்தவர் காயத்ரி.  அவருக்கு என் நன்றி.  இன்று முதல் இந்த இடத்திலும் இதைப்  பதிவிடுகிறேன்.  இன்று 67-ஆவது நாள்.  

ஊரின் மிக அழகான பெண் – kindle edition

1978-இலிருந்து 1990 வரையிலான காலகட்டம் என் வாழ்வில் மிக முக்கியமானது.  அப்போது நான் தில்லி சிவில் சப்ளைஸ் நிர்வாகத்தில் ஸ்டெனோவாக இருந்தேன்.  பாதி நாள் ஆஃபீஸ் போக மாட்டேன்.  லைப்ரரி மற்றும் மண்டி ஹவுஸில் உள்ள அரங்கங்களில் சினிமா, நாடகம், இசை, நடன நிகழ்ச்சிகள்.  அப்போதுதான் எனக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பரிச்சயம்.  1990-இல் சென்னை வந்த பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் என் வாசிப்பு தீவிரமாயிற்று.  கொஞ்சம் எஸ்பஞோலும் கற்றுக் கொண்டேன்.  … Read more

பூலோக சொர்க்கம்

ஃப்ரான்ஸின் தென்பகுதியில் தோர்தோன்யே (Dordogne) என்று ஒரு கிராமம் உள்ளது.  பூலோக சொர்க்கம்.  அந்த சொர்க்கத்தில் மேலும் அற்புதம் செய்திருக்கிறார் வியத்நாமிய ஜென் குரு Thich Nhat Hanh.  அங்கே யார் வேண்டுமானாலும் ஒரு வாரம் போய் தங்கலாம் (Retreat).  திச் நாட் ஹானின் இணைய தளம்: https://plumvillage.org/