மீளுமா தமிழகம்?

இன்று மதியம் 2 மணிக்கு சன் நியூஸ் சேனலில் மீளுமா தமிழகம் என்ற தலைப்பில் நடந்த விவாதம் ஒளிபரப்பாகிறது.  நான் கலந்து கொண்ட மிக முக்கியமான தொலைக்காட்சி விவாதம் இது.  பொதுவாக சன் தொலைக்காட்சி எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் நிறுவனமாக இருந்து வருவதை கவனித்திருக்கலாம்.  புத்தகத் திருவிழா சமயத்திலும் எழுத்தாளர்களை அழைத்து வந்து நீண்ட நேர உரையாடல்களை ஒளிபரப்புகிறது.  இன்றைய விவாதம் மது, மது அருந்துதல், மது விலக்கு பற்றியது.  பல வர்க்கங்களைச் சேர்ந்த பலரின் … Read more

நாளைய இலக்கியச் சந்திப்பு

ஒரு இலக்கியச் சந்திப்புக்குப் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.  மாலை ஐந்தரைக்குக் கூட்டம் ஆரம்பம்.  என் வழக்கப்படி ஐந்தேகாலுக்குப் போனேன்.  கூட்டம் நடத்துபவர் தனியாக அமர்ந்திருந்தார்.   ஐந்தேமுக்காலுக்கு இன்னும் இருவர் வந்தனர்.  அதில் ஒருவர் என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம்.  பிறகு ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்து விட்டு அந்த மூன்று பேருக்காக இருபது நிமிடம் பேசினேன்.  ஆறரை அளவில் ஞாநி பேசினார்.  அதற்குள் முப்பது பேர் வந்து சேர்ந்திருந்தனர்.  அப்படி ஆகி விடாமல் நாளைய கூட்டத்துக்குத் தவறாமல் … Read more

ஜெயமோகனின் அறம்

சாரு, எம் வி வெங்கட்ராம் குறித்த கட்டுரை அருமை .ஒரு தகவல் விடுபட்டிருந்தது .எம் வி வெங்கட்ராம் தான் ஜெயமோகனின் அறம் சிறுகதையின் நாயகன் என எண்ணுகிறேன் .நீங்கள் எதையும் இருட்டடிப்பு செய்பவர் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்த விஷயம் உங்கள் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது ஒரு விதமான உயர் உன்மத்த நிலையில் அந்த கட்டுரையை எழுதிய போது விடு பட்டிருக்கலாம் . எனவே தான் இந்த மின்னஞ்சல் .இம்சை செய்யவில்லை என்று எண்ணுகிறேன். நன்றி. அனிஷ் … Read more

சுந்தர் பிச்சை

அன்புக்குரிய நண்பர் பி.ஏ. கிருஷ்ணனின் முகநூலில் பின் வரும் குறிப்பைக் கண்டேன்.  அவருடைய கருத்தில் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்.  பல ஆண்டுகளாக இதைத்தான் நான் சொல்லி வருகிறேன். I had always had the suspicion that Tamil Nadu had a sizable share of persons who suffered from serious brain damage but were allowed to roam about freely in the cyberspace, especially the Facebook. … Read more

நான் ரங்கராஜ் பாண்டேயின் ரசிகன் (2)

ராஜ் சிவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவருடைய முகநூலில் கண்டுள்ள பின்வரும் விவாதம் உங்கள் பார்வைக்கு. ராஜ் சிவா: நேற்று ஆபாச இணையத்தளங்களத் தடைசெய்வதுபற்றித் தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் சாரு நிவேதிதா கலந்து கொண்டார். அவர் தனது கருத்துகளைச் சொல்லும்போது, ஐரோப்பிய நாடுகளில் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபாச வலைத்தளங்களைப் பார்க்கவே முடியாது. அதற்கான தொழில்நுட்பங்கள் அங்கு நடைமுறையில் உள்ளன. அதுபோல ஒரு தொழில்நுட்பத்தை இங்கும் கொண்டுவரலாம் என்றார். சாரு சொன்னது நூறுசதவீதம் … Read more

லிங்காத்தாள் குட்டை சந்திப்பு (2)

இது பற்றி நான் முன்பு எழுதியிருந்ததில் பண விஷயம் பற்றியும் குறிப்பிட்டிருந்ததால் அதுவே பிரதான விஷயமாக மாறி விட்டது.  இப்படி மாறும் என்று எதிர்பார்த்தே அதை எழுதலாமா விடலாமா என்று நீண்ட நேரம் யோசித்தேன்.  பிரதான விஷயம் அதுவல்ல.  நான் என்றுமே பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல என்பதை நண்பர்கள் அறிவர்.  எல்லோரும் அறிய வேண்டும் என நான் எதிர்பார்த்தது என்னவெனில், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் என்னிடம் வந்து விவாதித்து விட முடியும் என்ற அராஜக … Read more