ஆபாசப் புகைப்படங்கள் குறித்து…

30.04.2017 பொதுவாக என்னைப் பற்றி பிரச்சினை செய்பவன், வில்லங்கம் என்று பலரும் சொல்வதைக் கேள்வியுற்றிருக்கிறேன்.  அப்படியெல்லாம் இல்லை என்பது என்னோடு பழகியவர்களுக்குத் தெரியும்.  மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் எனக்குச் செய்யும் வில்லங்கம் பற்றிக் கறாராகச் சொல்லி விடுவேன்.  இதுதான் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.  சொன்னவுடனே, தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்குப் பதிலாக என்னைத் தங்களின் ஜென்ம விரோதிப் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள்.  எனக்கும் அது பற்றித் துளிக் கவலையும் இல்லை என்பதால் வாழ்க்கை … Read more

சமஸ்

17.4.2017 சில தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் தி இந்துவில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தீர்களா? படிக்கவில்லையெனில் உடனே இங்கே படித்து விடுங்கள். நான் கடந்த பல ஆண்டுகளாகப் புலம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். விஷயம் இதுதான். தில்லியில் நடந்த ஒரு கவிதைக் கருத்தரங்குக்குச் சென்றிருக்கிறார். இந்திய மொழிகளிலிருந்து பல கவிஞர்கள். கடைசியில் பார்த்தால் இவர் கவிதைகள் மட்டுமே வேறு ஏதோ ஒரு தளத்தில் இருந்திருக்கின்றன. அது மட்டும் அல்ல; அந்தக் கவிஞர்கள் அத்தனை … Read more

அசோகமித்திரனின் ஆவி

13.4.17 அசோகமித்திரனின் ஆவி சும்மா பூந்து விளையாடுகிறது.  இறந்து இத்தனை தினங்கள் ஆகியும் சர்ச்சை தீர்ந்தபாடில்லை.  அசோகமித்திரனின் இறுதிச் சடங்கில் சுமார் 25 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்று குமுதத்தில் எழுதியிருந்தேன்.  அதோடு விட்டிருக்கலாம்.  என் போறாத காலம், வைரமுத்துவின் பெயரையும் சேர்த்து விட்டேன், இப்படி: ”பாரதியின் சவ ஊர்வலத்தில் பதினான்கு பேர் கலந்து கொண்டார்கள்.  அவருடைய பிணத்தின் மீது மொய்த்த ஈக்களை விட சவ ஊர்வலத்துக்கு வந்த எண்ணிக்கை கம்மி என்று துயரத்துடன் எழுதினார் … Read more