நண்பர்கள்: மனுஷ்ய புத்திரன்

12.3.17 நண்பர்கள் – மனுஷ்ய புத்திரன் எனக்கு செத்த எலிகளைத் தெரியும் அன்பின் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியாது. (தித்திக்காதே தொகுதியில் மனுஷ்ய புத்திரன். அநேகமாக என்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.) நேற்று (11.3.2017) தி இந்து நாளிதழில் நான் எழுதியிருந்த ‘என் நண்பர்கள்’ என்ற கட்டுரை சில நண்பர்களுக்கு மன உளைச்சலையும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  அவர்களில் முக்கியமானவர் மனுஷ்ய புத்திரன்.  அவரை நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முகநூல் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கியதோடு மட்டும் … Read more

இன்னும் அழகிய உலகில்…

நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு நடக்கும் போது பேச்சில் ஆண்டாளும் வரும், லிங்கனும் வருவார், ஸ்டாலின் கருணாநிதி போன்றவர்களும் வந்து போவர். அநேகமாக ஜெயமோகன் பற்றி இரண்டு தினங்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் சொல்வேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டு, “இதெல்லாம் அவருக்குத் தெரியுமா?” என்றார் ஒருநாள். ம்ஹும். வாய்ப்பில்லை என்றேன். அப்படித்தான் நேற்று ஜெ. பற்றிப் பேச்சு வந்தது. அவர் ஏன் அப்படி ஆக்ரோஷமாக எழுதுகிறார். அவரால் விமர்சிக்கப்படுபவருக்கு ஜன்னி வந்து விடும் … Read more