நதீகா பண்டாரவின் ஹா ஹா ஹா உல்லாச விஷாத: நாடகம்

நான் இலங்கை சென்றிருந்தபோது கேகே சமன் குமரவுடனும் நதீகாவுடனும்தான் தங்கியிருந்தேன். அந்த அனுபவங்களையே என் உல்லாசம் உல்லாசம் நாவலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் நதீகாவின் பகுதி பலஹீனமாக இருப்பதாக சீனி சொன்னதால் அதை இன்னும் வலுவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் தில்லியில் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்ததால் சர்வதேச நாடகப் போக்குகள் பற்றி அறிவேன். நாடகத் துறை இன்னும் நான் நினைக்கும் அளவு வளரவில்லை. என்னுடைய நாடகத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக வர வேண்டும் என்றால், உடலுறவுக் காட்சிகள் … Read more

ஷ்ருதி டிவி சாதனை

ஷ்ருதி டிவி பத்து லட்சம் வாசகர்களை அடைந்திருக்கிறது. கபிலனுக்கும் சுரேஷ்குமாருக்கும் வாழ்த்துகள். ஷ்ருதி டிவி தமிழ் இலக்கிய உலகில் ஒரு மகத்தான சாதனை. ஷ்ருதி டிவி இல்லாவிட்டால் என்னுடைய மேடைப்பேச்சுகள் எதுவுமே வாசகர்களைச் சென்றடைந்திருக்காது. சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் அத்தனை பேரையும் வாசகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை ஷ்ருதி டிவி கபிலனுக்குரியது. அவர் ஒரு கோடி வாசகர்களை விரைவிலேயே அடைய வாழ்த்துகிறேன்.

க.நா.சு. அளித்த பொக்கிஷங்கள்

மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:”க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.”(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு … Read more

My Life: My Text

என்னுடைய சுயசரிதத்தை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் பலரும் என்னை நிரம்பவும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஒரு நண்பர் என் வாழ்க்கை ஜெனேயின் வாழ்வைக் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது என்றார். இன்னொரு நண்பர் எழுத்துப் பாணியில் வி.எஸ். நைப்பாலின் சாயல் தெரிகிறது என்றார். இரண்டாவதை நான் விரும்பித்தான் ஏற்றுக்கொண்டேன். ஆங்கிலம் என்னுடைய மொழி இல்லை என்பதால் வி.எஸ். நைப்பாலை என் முன்னோடியாகக் கொண்டேன். இதுவரை நான்கு அத்தியாயங்கள் வந்துள்ளன. படித்துப் பாருங்கள். எல்லாம் தமிழில் படித்ததுதான். ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும்போது … Read more

பெங்களூர் வாசகர் சந்திப்பு

ஏப்ரல் ஐந்தாம் தேதி பெங்களூர் கிளம்புகிறேன். ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய நான்கு நாள்களில் மாலையிலும் இரவிலும் என்னைச் சந்திக்கலாம். கோரமங்களாவில் தங்கியிருப்பேன். ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு போட்டும் யாரும் சந்திப்பதாக எழுதவில்லை. ஜாலியாக இருக்கிறது. சென்ற முறை வந்த நண்பர்கள் எனக்காக அவித்த பனங்கிழங்கு, எலந்த வடை போன்ற அரிய விஷயங்களை எடுத்து வந்தார்கள். அதை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முறை அந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வர … Read more