பூச்சி 93

ஒரு பெயரை விட்டு விட்டேன்.  இளம் எழுத்தாளர்.  முகநூலில் அவர் எழுதுவதைப் படித்திருக்கிறேன்.  பிடிக்கும்.  தன் சிறுகதையைத் தொகுதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.  ஒரு ஆண்டு ஆனது படிக்க.  அதுவரை தொடர்ந்து கேட்டபடியே இருந்தார்.  இடையில் என் நண்பர் ஒருவரும் அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்தார்.  படித்தேன்.  அவர் எந்த மக்களைப் பற்றி எழுதியிருந்தாரோ அதுதான் தமிழில் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் பதிவு.  நல்ல இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் இருந்தது.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய … Read more

பூச்சி 92

நேற்றைய பதிவில் இளம் எழுத்தாளர்கள் பற்றி அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் எனக்கு அவர்களின் எழுத்து பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.  இதில் உள்ள முதல் விஷயம் பற்றி அவர்கள் எவ்விதக் குற்ற உணர்வும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் – இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.  சிலர் என்னைப் படித்ததே இல்லை.  சிலருக்குப் படித்தாலும் பிடிக்கவில்லை.  இதனால் இவர்களின் வாழ்க்கையிலேயே இவர்கள் என் பெயரைக் குறிப்பிட எந்த வாய்ப்பும் இல்லை.  இது … Read more

To You Through Me – 11

அன்புள்ள சாரு, உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து  கொள்ள நினைக்கிறேன். சிலவற்றை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.  முதலாவதாக நகுலன் உரையில் நீங்கள் அவரை ஒரே ஒரு முறை சந்தித்ததாகவும் அது அவர் இறப்பதற்கு முந்தின வருடம் என்றும் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் நகுலனை அவர் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்ததாகவும் பின்னர் அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்தாகவும் நகுலனின் நினைவஞ்சலியில் குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் முறை சந்தித்த பொழுது அவரோடு உரையாடியதையும் இரண்டாம் முறை சந்தித்த பொழுது அதை காணொளியாக பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நகுலனின் உங்கள் உரையைக் கேட்கும் முன்னர் … Read more

பூச்சி 91

பூச்சியைத் தொட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி உள்ளது.  இன்று ஒரு நண்பர் நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பினார்.  எல்லாம் என் சக (தமிழ்) எழுத்தாளர்களின் சமீபத்திய நூல்கள்.  ஆஹா, இந்த ஆலோசனைக்கு நான் எத்தனை முறை பதில் எழுதியிருக்கிறேன்?  என்னுடைய பலவீனம் என்னவென்றால், எத்தனை முறை ஒரே ஆலோசனையைச் சொன்னாலும் நானும் சலிக்காமல் ஒரே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பேன்.  ஒரே பதில் என்றாலும் அதன் உள்மடிப்புகள் வேறாகத்தான் இருக்கும் என்பதால் மற்றவர்களுக்கு அது … Read more

To You Through Me – 10

லவ்லி சாரு,  உங்களுடைய நகுலன் உரையைக் கேட்க முடிந்தது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன். உங்களுக்கும் சதீஷ்வரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் வாசகர்கள், நண்பர்கள் எல்லாரும் மிக அருமையாக சொல்லிவிட்டார்கள்: ஒரு ஆன்மிக அனுபவம் என்றும், ஒரு trance நிலை என்றும். எனக்கும் அதே தான் தோன்றியது.  நேற்று ஒரு விஷயத்தை கவனித்தேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் உதாரணங்கள், reference கொடுத்து பேசும்போது, உங்கள் வாசகர்கள் மின்னல் போல செயல்பட்டு அந்த reference-க்கு உரிய Wikipedia … Read more

To You Through Me – 9

இணைய தளத்தில் இரண்டு தொடர்கள் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  To You Through Me என்ற இந்தத் தொடர்.  மற்றும் பூச்சி.  இந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதி இன்று. நேற்றைய நகுலன் உரை நான் எதிர்பார்த்ததை விட உயர்தரமாக அமைந்து விட்டது.  கொஞ்சம் பயந்துகொண்டுதான் இருந்தேன்.  ஏனென்றால், நகுலனின் வாழ்க்கை செல்லப்பாவின் வாழ்க்கையைப் போல் அத்தனை சம்பவங்கள் நிறைந்தது இல்லை.  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனித்த வீட்டில் ஒரே ஒரு பணிப்பெண்ணுடன் எப்போதுமே தனியாக வாழ்ந்த, … Read more