பூச்சி 92

நேற்றைய பதிவில் இளம் எழுத்தாளர்கள் பற்றி அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் எனக்கு அவர்களின் எழுத்து பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.  இதில் உள்ள முதல் விஷயம் பற்றி அவர்கள் எவ்விதக் குற்ற உணர்வும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் – இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.  சிலர் என்னைப் படித்ததே இல்லை.  சிலருக்குப் படித்தாலும் பிடிக்கவில்லை.  இதனால் இவர்களின் வாழ்க்கையிலேயே இவர்கள் என் பெயரைக் குறிப்பிட எந்த வாய்ப்பும் இல்லை.  இது பற்றி ஏன் அவர்கள் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்?  நான் தான் நேற்றே எழுதியிருந்தேனே, இதில் எனக்கு அக்கறை இல்லை என்று? 

சற்று விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.  என் தந்தை என்று நான் சொல்லக் கூடிய அசோகமித்திரனுக்கு என் எழுத்து பிடிக்காது.  அவர் வெறுக்கக் கூடிய எழுத்து என்னுடையது.  அதன் காரணமாக அவர் மீதான என் அபரிமிதமான அன்பும் நெருக்கமும் அவருக்கு ஒரு சுமையாகவே இருந்தது.  ஆகா ஓகோ என்று நான் கொண்டாடும் தஞ்சை ப்ரகாஷ் என் எழுத்தைப் படித்ததில்லை.  சுஜாதா என் எழுத்தை மலம் என்று வர்ணித்தார்.  க.நா.சு.வுக்கு என் பெயர் தெரியாது.  சி.சு.செல்லப்பாவுக்கு என்னைக் கண்டாலே கோபத்தில் உடல் நடுங்கும்.  எனக்கும் அப்படித்தான்.  கரிச்சான் குஞ்சுவுக்கு என் பெயர் தெரியாது.  தி.ஜானகிராமனுக்கு என் பெயர் தெரியாது.  ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இவர்களையெல்லாம் நான் சந்தித்திருக்கிறேன்.  கி.ராஜநாராயணனுக்கு என் எழுத்து பிடிக்காது.  ந. முத்துசாமிக்கு நான் அவர் மகனின் நண்பன்.  மற்றபடி என் எழுத்தை அவர் படித்ததே இல்லை.  ஆனால் (சுஜாதா தவிர) இவர்கள் அனைவரும் என் கடவுள்கள்.  என் எழுத்தின் மீது மரியாதை உள்ள ஒரே ஒரு மூத்த எழுத்தாளர் என்றால், அது இந்திரா பார்த்தசாரதி மட்டுமே.  ஆக, நான் கடவுளாக மதிக்கும் எழுத்தாளர்களுக்கே நான் பிடிக்காத எழுத்தாளன் அல்லது தெரியாத எழுத்தாளன் என்கிற போது என்னை விட முப்பது வயது குறைந்த இளையவர்களான நீங்கள் என் பெயர் குறிப்பிடாதது பற்றியா நான் கவலைப்படப் போகிறேன்?  அல்லது, அம்மாதிரி அங்கீகாரமெல்லாம் எனக்குத் தேவையா?  பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதிக்கு அகில இந்திய அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்.  கிடைத்திருந்தால் அதில் நான் குறிப்பிட்டிருக்கும் முன்னோடிகளெல்லாம் அகில இந்திய அளவில் தெரிய வந்திருப்பார்கள்.  அது நடக்கவில்லை.  மற்றபடி நீங்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை வைத்துக் கொண்டு, உங்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதைக் கண்டு எனக்கு என்ன ஆக வேண்டும் தம்பிகளே?  எந்தக் குற்ற உணர்ச்சியும் வேண்டாம்.  எனக்கு உங்கள் எழுத்து பிடித்திருக்கிறது என்பதற்காக உங்கள் பட்டியலில் என் பெயரை இடம் பெறச் செய்யாதீர்கள்.  எனக்கு உங்கள் எழுத்து பிடித்திருக்கிறது என்றால், அதை நான் என் இதயத்திலிருந்து சொல்கிறேன்.  ஆனால் உங்கள் பட்டியலில் என் பெயரை நீங்கள் இடம் பெறச் செய்தால் அதை நீங்கள் நன்றிக் கடனாகச் செய்வது ஆகும்.  மற்றபடி உங்களுக்கு நிஜமாகவே பிடித்திருந்தால் அது வேறு விஷயம்.

எதற்காக இதை எழுத நேர்ந்தது என்றால், ஒரு இளம் எழுத்தாளர் நேற்று எனக்கு போன் செய்தார்.  எனக்குப் பிடித்த எழுத்தாளராக நேற்று நான் குறிப்பிட்டிருந்தவர்.  “அப்படியெல்லாம் இல்லை சாரு. உங்கள் புத்தகங்களையெல்லாம் என் நண்பர்களுக்கு நான் அறிமுகம் செய்வதுண்டு” என்றார்.  அடடா, இதெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசுகிற பேச்சா?  இது அல்ல விஷயம்.  நான் உடனடியாகக் கேட்டேன்.  இவர் என் எழுத்தை வாசிப்பவர் அல்ல; அப்படி இருக்கும் போது நம் தளத்தில் எழுதியது இவருக்கு எப்படித் தெரியும்?  கேட்டேன்.  “யார் சொன்னா?”  கேட்டதே அப்படித்தான்.  அவர் படித்திருக்க மாட்டார் என்று நிச்சயமாகத் தெரியும்.  என் நண்பர் அனுப்பி வைத்திருந்தார்.  அப்படிப் போடு அருவாளை.  இதைத்தான் சொன்னேன்.  இவர்களின் வாசிப்பு எல்லையிலேயே நான் இல்லை. அதை நாம் இருவரும் கௌரவமாக ஒத்துக் கொள்வோம்.  ஆனாலும் உங்கள் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது.  நாம் நட்புடன் இருக்க இது ஒன்றே போதும். உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கவே இல்லை; என்ன எழுதறீங்க நீங்க என்று என்னைச் சந்திக்கும் போதெல்லாம் வினவிய அசோகமித்திரனோடு நான் பழகவில்லையா? 

எனக்கு என் எழுத்து பற்றித் தெரியும்.  நான் வ்ளதிமீர் நபக்கோவை விடவும், ஹாருகி முராகாமியை விடவும், உம்பர்த்தோ எக்கோவை விடவும், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை விடவும் காத்திரமான எழுத்தாளன்.  எனவே எனக்கு உங்களைப் போன்றவர்களின் சான்றிதழ்களோ சிபாரிசுகளோ தேவையில்லை.  இதைக் கூட நான் சாதாரணமாகத்தான் சொல்கிறேனே தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஜாலியாக இருங்கள். 

மேலும், நான் 25 ஆண்டுகள் முன்னோக்கி எழுதுகிறேன்.  என் எழுத்தை இப்போது 35 – 40 வயதில் இருக்கும் உங்களை விட உங்கள் பிள்ளைகள் விரும்பிப் படிக்க வாய்ப்புகள் அதிகம்.  அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தால்.  உதாரணமாக, ஈஷ்வர், வளன் அரசு, அர்ஜுன் மோகன் போன்ற மாணவர்கள் போதும் எனக்கு.  இவ்வளவும் எனக்கு அர்ஜுனின் ஒரு கடிதத்தைப் படித்த போது தோன்றியது.  முதலில் இதையெல்லாம் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன்.  ஆனால் அர்ஜுனின் கடிதம் இதை எழுத வைத்து விட்டது.  ஆங்கிலத்தில் உள்ள இந்தக் கடிதத்தைப் பொறுமையாகப் படியுங்கள்.  தமிழில் மொழிபெயர்க்க நேரம் இல்லை.

Dear Charu,

The lecture on Nakulan was truly overwhelming , easily one of your best …I had been reading his நினைவுப் பாதை , works of Wittgenstein , and Lunar Caustic before attending as a homework, three hours expended like a jiffy. It’s a renowned fact that Nabokov has given the best lectures on Dostoevsky , and one can easily come to a conclusion your lecture on Nakulan produces the same effect. We have read so much about rhetorics and communication in college but the way you code the source artefacts and text into a narrative and adapt it to the listeners in such a way that they can concretize and provide with a context for a deeper reflection and reinterpretation is just amazing…not amazing but natural.

A bird flying may be amazing to humans, but for the bird itself it’s quite natural, just like your lecture.

Mahamudra is considered as the ultimatum of Tibetan (kagyu) meditation, where a person tends to flow naturally in the essence of his own mind. I could see that in you during the talk, transforming the scholarly intellect into a trance like self-realization. The least I could do in return is to get you the books that you have mentioned on the to-read list: a few I already had and got the rest from the Kindle store, I’ve sent them to your Kindle id. Khalil Hawi and Lyacos are not available in the Kindle store. They are available in rakuten (in French) but I’ve exceeded my spendings…

Beloved Reader,

Arjun.

இந்தக் கடிதத்தை விட ஒரு அங்கீகாரமோ சான்றிதழோ வேறு தேவையா என்ன?  இப்படி ஒரு நூறு பேர் இருக்கிறார்கள்.  இது போதும்.

அர்ஜுனுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் எழுதினேன்.  நேற்று நான் கொடுத்த பட்டியலில் உள்ள புத்தகங்கள் காகிதப் புத்தகங்களாகவே என்னிடம் உள்ளன.  காசு செலவழித்து கிண்டிலில் வாங்கியிருக்க வேண்டாம்.  கிண்டிலில் வாங்க இன்னும் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.  இனிமேல் என்னிடம் கேட்டு விட்டு வாங்கும்படிச் சொன்னேன்.  மேலும், நம் தமிழ் எழுத்தாளர்கள்தான் அம்பது ரூபாய்க்குப் புத்தகம் விற்கிறோம்.  மேற்கத்திய எழுத்தாளர்களின் நூல்கள் ரெண்டாயிரம் மூவாயிரம் ரூ. என்று போகிறது.  இனி என்னைக் கேட்டு விட்டுச் செலவு செய்யச் சொல்லியிருக்கிறேன்.

***

டிக்டாக்கைத் தடை செய்ததற்காக கொரோனா இல்லாமல் இருந்தால் ஒரு பெரிய பார்ட்டியே கொடுத்திருப்பேன்.  அந்த அளவுக்குப் படுத்தியெடுத்தி விட்டார்கள் இந்தப் பெண்கள்.  ஒரு பக்கம் 65 வயதுப் பெண்கள் க்ளீவேஜ் தெரிய போஸ் கொடுத்து அதகளம்.  உடனே இந்த sex starved ஆண் மூடர்கள் ஐயோ தெய்வமே ஐயோ தேவதையே என்று அந்தக் கிழவிகளைக் கொஞ்சிக் கொஞ்சி போடும் பின்னூட்டங்கள்.  இன்னொரு பக்கம், இளம் பெண்கள் செய்த வன்கொடுமை.  ஆம்.  அதையெல்லாம் வன்கொடுமையில்தான் சேர்க்க வேண்டும்.  என்னென்ன அட்டூஷியம்.  Port siteஓ என்று எண்ணும் அளவுக்கு ரகளைகள்.  சமீபத்தில் ஒரு மூன்றெழுத்து முன்னாள் நடிகை போட்ட அட்டகாசம்.  ரொம்பவே பிரச்சினையாக இருந்தது.  ரெண்டு வருடமாகத்தான் குண்டலினி சக்தியை சஹஸ்ராரச் சக்கரத்தின் பக்கம் நகர்த்தலாம் என்று முயற்சி செய்து கொண்டிருந்தேன்.  அப்போது பார்த்து டிக்டாக் சனியன் வந்து குண்டலினியைக் கீழ் நோக்கி இழுத்தது.  இப்போது டிக்டாக்குக்குத் தடை என்றதும் சந்தோஷம்.  இனி குண்டலினிக்குப் பிரச்சினை இல்லை.  விர்ரென்று சஹஸ்ராரத்தை நோக்கிச் செலுத்த வேண்டியதுதான்.  சனியன் பிடித்த கிழவிகளா குமரிகளா தொலைந்து போங்கள்.   

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai