பூச்சி 91

பூச்சியைத் தொட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி உள்ளது.  இன்று ஒரு நண்பர் நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பினார்.  எல்லாம் என் சக (தமிழ்) எழுத்தாளர்களின் சமீபத்திய நூல்கள்.  ஆஹா, இந்த ஆலோசனைக்கு நான் எத்தனை முறை பதில் எழுதியிருக்கிறேன்?  என்னுடைய பலவீனம் என்னவென்றால், எத்தனை முறை ஒரே ஆலோசனையைச் சொன்னாலும் நானும் சலிக்காமல் ஒரே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பேன்.  ஒரே பதில் என்றாலும் அதன் உள்மடிப்புகள் வேறாகத்தான் இருக்கும் என்பதால் மற்றவர்களுக்கு அது புதிதாகவும் இருக்கும்.  ஆக, இன்றைய மஜா ஆரம்பம்.

முதல் கேள்வி, ஏன் நான் என் சக எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும்? 

இப்படி நான் கேட்டாலும் நான் சக எழுத்தாளர்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  நான் படித்தால் ஒரு பெரும் பட்டாளமே என்னோடு சேர்ந்து படிக்கிறது.  உதாரணம், அய்யனார் விஸ்வநாத்.  எத்தனையோ ஆண்டுகளாக எழுதி வருகிறார்.  இத்தனைக்கும் இலக்கியத்தின் இரண்டாவது தலைமையகமான திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.  ஆனால் அண்ணாமலைக்காரர்களே அவரைக் கண்டு கொள்ளவில்லை.  அது தமூள் எழுத்தாளர்களுக்குப் பழக்கமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அண்ணாமலை மட்டும் என்ன விதிவிலக்கா? 

சாதனா.  இன்னும் கொஞ்ச நாளில் ஐரோப்பா முழுவதும் அறியப்படப் போகிறார்.

அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்.  நாவல் இன்னும் வரவில்லை.  பட்டக்காடு வரட்டும்.  ஆழிசூழ் உலகு எத்தகைய அலையை உருவாக்கியதோ அதே போன்ற பேரலையை உருவாக்கவல்ல நாவல் அது.  இலங்கையின் பிரபலமான தினசரிகளில் தொடர் எழுதி வந்தாலும் இந்தச் சூழலில் அமல்ராஜ் என்னுடைய கண்டுபிடிப்பு என்றே சொல்வேன். 

சிறுபத்திரிகை புத்திஜீவிகள் மத்தியில் பிரபலமான பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சிறுகதைத் தொகுதி(துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை) பற்றிய என்னுடைய உரையை நீங்கள் கேட்க வேண்டும். 

ஆத்மார்த்தியின் சிறுகதைத் தொகுப்பு பற்றி நான் ஆற்றிய உரையும் ஒரு சீரிய கட்டுரைக்கு நிகரானது.  அவருக்கும் அவரது நண்பர்களுக்குமே அது இன்று மறந்திருக்கும்.  ஆனால் ஆத்மார்த்தி தவிர நான் குறிப்பிடும் பல எழுத்தாளர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் பட்டியலிலேயே நான் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.  உதாரணமாக, பாலசுப்ரமணியன் பொன்ராஜைக் குறிப்பிடலாம்.  எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அவர்.  ஆனால் அவருடைய வாழ்நாள் பரியந்தம் என் பெயரை உச்சரிக்க வாய்ப்பு இல்லை.  அதேபோல் பா. வெங்கடேசன்.   இந்த உலகத்திலேயே உங்களுக்குப் பிடித்த ஒரே எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள் என்றால், பா. வெங்கடேசனின் பெயரைச் சொல்லுவேன்.  ஆனால் அவருமே அவரது வாழ்நாளில் என் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கும் சாத்தியமோ வாய்ப்போ இல்லை.  காரணம், இவர்களது எழுத்து எனக்குத்தான் பிடித்திருக்கிறதே தவிர இவர்களின் பிரியத்துக்குரிய எழுத்தாளர் பட்டியலில் நான் இல்லை.  அது பற்றிய அக்கறையும் எனக்கு இல்லை. 

 பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பேட்டி கீழே:

https://www.hindutamil.in/news/literature/151366-.html

பலமுறை எழுதியிருக்கிறேன்.  எனக்குத் தெரிந்த, நான் சிந்திக்கின்ற, எழுதுகின்ற மொழி தமிழ் மட்டுமே.  ஆங்கிலம் வாசிப்புக்கான மொழி.  என்றாலும் என்னை நான் ஒரு தமிழ் எழுத்தாளனாக உணரவில்லை.  பாவ்லோ கொய்லோ போர்த்துக்கீசிய மொழியில் எழுதினாலும் அவர் ஒரு சர்வதேச எழுத்தாளர்தான் இல்லையா?  அவர் வசிப்பதும் ஃப்ரான்ஸில்.  அப்படியாக நான் ஒரு இந்திய எழுத்தாளனாகத்தான் அறியப்பட விரும்புகிறேன்.  கூகிளில் போய்த் தேடினால்தான் சாதத் ஹாஸன் மாண்ட்டோ பாகிஸ்தானிய எழுத்தாளர் என்று தெரியும்.  மாண்ட்டோவும் மஹாஸ்வேதா தேவியும் நிலவியல் எல்லைகளைக் கடந்தவர்கள்.  அதேபோல் நான் தமிழில் எழுதினாலும் தமிழ் நிலவியல் எல்லைகளைக் கடந்தவனாகவே அறியப்பட விரும்புகிறேன்.  அந்த வாய்ப்பு தமிழில் க.நா.சு.வுக்கு மட்டுமே கிடைத்தது.  அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  என்ன துரதிர்ஷ்டம் என்றால், அவருக்குத் தமிழ் அளவுக்கு ஆங்கிலம் தெரியும்.  ஃப்ரெஞ்சும் ஜெர்மனும் ஸ்வீடிஷும் நமக்கு இப்போது தெரிந்திருக்கும் ஆங்கிலம் அளவுக்குத் தெரியும்.  ஆனாலும் மனிதர் அவருக்குக் கிடைத்த சர்வதேச வாய்ப்பைப் புறக்கணித்து விட்டார்.  உலகின் மிக முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வந்தன.  ஆனால் அவரோ மணிக்கொடிக்கும் எழுத்துவுக்கும் எழுதுவதில்தான் ஆனந்தப்பட்டார்.  அவர் தந்தை வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டார்.  (அவர் தந்தை மிகத் தீவிரமான இலக்கிய ஆர்வம் கொண்டவர்)  டேய் சுப்ரமணி, தமிழில் எழுதி உருப்படாமல் போய்டாதேடா, தமிழில் எழுது பரவாயில்லை; ஆனால் ஆங்கிலத்திலும் எழுது என்று கெஞ்சிப் பார்த்தார்.  ஆனால் க.நா.சு. ஆடிக்கொரு கட்டுரை அமாவாசைக்கு ஒரு கட்டுரை என்றுதான் அந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகளுக்கு எழுதினார். 

க.நா.சு.வுக்கு அடுத்தபடியாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  நான்கு ஆண்டு காலம் ஏஷியன் ஏஜ் தினசரியின் அகில இந்தியப் பதிப்பிலும் லண்டன் பதிப்பிலும் பத்தி எழுதியிருக்கிறேன்.  நான்கு ஆண்டுக் காலமாக லண்டனிலிருந்து வரும் ArtReview Asiaவில் மிக முக்கியமான பத்தியை எழுதி வருகிறேன். 

இரண்டு உதாரணம் தருகிறேன்.  ஒரு இலக்கியச் சந்திப்பில் வில்லியம் டால்ரிம்பிள் என் எதிரே வந்தார்.  ஹாய் சொன்னேன்.  அவரும் ஹாய் சொல்லி இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.  பிறகு இரண்டு தினங்கள் கழித்து அவரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, மன்னிப்புக் கோரி.  போன இடத்தில் ஒரு சின்ன பிரச்சினையில் மாட்டிக் கொண்டு திரும்பி என்னிடம் வர முடியாமல் போனதாக.  (அது ஒரு பிரம்மாண்டமான காக்டெயில் பார்ட்டி!)

இன்னொரு முறை.  நடந்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும்.  ஒரு இலக்கிய விழா.  நண்பர்கள் குழுவில் சேத்தன் பகத்.  என்னிடம் ஹலோ சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் ஹவ் ஆர் யூ சார் என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்.  நம்மை எப்படி இவருக்குத் தெரியும்?  ஃபைன் என்று சொல்லி விட்டு, ஏதோ பேச வேண்டுமே என்று உங்களுடைய டூ ஸ்டேட்ஸ் படித்திருக்கிறேன் என்றேன்.  உடனே அவர் அடைந்த ஆச்சரியத்தை என்னால் மறக்கவே முடியாது. 

“என்ன, நீங்கள் என் நாவலைப் படித்தீர்களா?  ஓ மை காட்!  என்னால் நம்பவே முடியவில்லை…”  

உடனே எனக்கு ஒரு சந்தேகம்.  நம்மை இவர் யார் என்று நினைக்கிறார்?  மணி ரத்னம் என்று நினைத்து விட்டாரோ?  அப்படியும் சில இடங்களில் நடந்திருக்கிறது.  சம்சயமாகவே இன்னும் விளையாடுவோம் என்று எண்ணி, “படித்தது மட்டும் இல்லை; எனக்குப் பிடித்தும் இருந்தது” என்றேன்.  திரும்பத் திரும்ப கடவுளையே அழைத்தார்.  அவர் சொன்ன பதிலில் அவருக்கு என்னைத் தெரிந்திருந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்.  “உங்களைப் போன்ற தீவிரமான புத்திஜீவிகள் ஸ்டஃப் இல்லையே என் நாவல் என்றுதான் ஆச்சரியப்படுகிறேன்” என்றார்.

”ஜனரஞ்சகமான எழுத்தும் அவ்வப்போது படிப்பேன்.  ஒரு மைலாப்பூர் பிராமணர் பற்றியும் மைலாப்பூர் பற்றியும் நீங்கள் எழுதிய அளவுக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் கூட எழுதவில்லை.  அதை ரொம்பவும் ரசித்தேன்.  மேலும், ஒரு தமிழ்ப் பெண்ணும் பஞ்சாபிப் பையனும் காதலிக்கும் கதையை எத்தனை முறை எத்தனை பேர் எழுதிப் படித்தாலும் சலிக்காது” என்றேன். 

இன்னொரு சம்பவம்தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.  உண்மையில் இரண்டு ஆச்சரியங்கள்.  தில்லி.  2010. இண்டியா இண்டர்நேஷனல் செண்டர் உணவகம்.  நான், ஆஷிஷ் நந்தி, வங்காளத்தின் முன்னணிக் கவி ராய் கோஸ்வாமி.  மேஜையில் நான் ஆஷிஷுக்குக் கொடுத்த ஸீரோ டிகிரி நாவல்.  ராய் ஸீரோ டிகிரியை எடுத்துப் புரட்டிப் பார்த்து விட்டு புருவத்தைச் சுருக்கினார்.  ”இந்தப் புத்தகத்தை சமீபத்தில் எங்கேயோ பார்த்தேனே…” என்றார்.  ரொம்ப நேரம் யோசித்தார்.  கிடைக்கவில்லை.  பிறகு பேச்சு திசை மாறியது.  பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென்று, “ஞாபகம் வந்து விட்டது.  சென்ற வாரம் என் மகள்தான் இதைப் படித்துக் கொண்டிருந்தாள்” என்றார்.  கல்லூரியில் படிக்கும் மகள்.  எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.  உத்தர்காண்டில் உள்ள நைனிடாலிலிருந்து ஐம்பது கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு காட்டில் இருக்கும் பங்களா ஒன்றில் பத்து இருபது இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் கூடினார்கள்.  மூன்று தினங்கள்.  ஆஷிஷ் நந்திதான் தலைவர்.  என்னையும் அழைத்திருந்தார்கள்.  தினமும் காலை பத்திலிருந்து ஒரு மணி வரை இலக்கிய விவாதம்.  மதியம் குடி.  மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை பேச்சும் அதற்குப் பிறகு குடியும் விவாதமும்.  ஏதோ ஒரு விவாதத்தின் போது ஒரு உதாரணம் சொல்ல, ஆஷிஷ் நந்தி ஸீரோ டிகிரியிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினார்.  நான் அங்கே வருகிறேன் என்பது கூட அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க நியாயம் இல்லை.  எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்திருந்த நாவலைப் படித்திருந்ததோடு அதை ஞாபகமும் வைத்துக் கொண்டிருந்தார்.  பிறகு நைனிட்டாலிலிருந்து தில்லி வரை காரில் ஒன்றாகத்தான் வந்தோம். 

அங்கே நான் ஒரு தமிழ் எழுத்தாளனாக மட்டும் நின்று கொண்டிருந்தால் என்னால் அவர்களோடு சமமான அளவில் உரையாடிக் கொண்டிருக்க முடியுமா?  அதுவும் மூன்று நாட்கள்.  இரவு பகலாக.  நடந்தது கருத்தரங்கம் அல்ல.  கருத்தரங்கம் என்றால் நம்முடைய பேப்பரை மட்டும் படித்து விட்டு அல்லது பேசி விட்டு கம்மென்று தப்பி விடலாம்.  இந்தச் சந்திப்பு அப்படி அல்ல.  மூன்று நாட்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சேர்ந்து தங்கி காலையிலிருந்து நள்ளிரவு வரை பேச வேண்டும், உரையாட வேண்டும்.  கெக்கெபிக்கே என்று மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  ஏழு மணி நேரம் தீவிரமான உரையாடல்.  காலை சந்திப்பு திறந்த வெளியில்.  பத்திலிருந்து ஒன்று.  மாலை சந்திப்பு ஆறிலிருந்து ஒன்பது மூடிய அறைக்குள்.  ஒன்பதிலிருந்து பனிரண்டு வெட்டவெளியில்.  நல்ல குளிர்காலம்.  அங்கே போய் அவர்களுக்குத் தெரிந்தே இராத தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் பேச முடியாது.  உலக இலக்கியத்தைப் பற்றி எல்லா தமிழ் எழுத்தாளருமே கில்லி.  இந்திய ஆங்கில எழுத்தாளர்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.  அதுவும் தவிர ஆங்கிலத்தில் நன்கு உரையாடக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். 

ஒருநாள் காலை ஏழு மணிக்கு அங்கே இருந்த தேவதாரு மரங்களின் நடுவே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.  மனித நடமாட்டமே இல்லை.  எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் போல.  திடீரென்று பின்னாலிருந்து சன்னமாக Divenire கேட்டுக் கொண்டிருந்தது.  Ludovico Einaudi.  யாரது?  பின்னால் திரும்பிப் பார்த்தேன்.  ஒரு சிறிய கருவி மட்டும் தெரிந்தது.  ஆள் இல்லை.  கண்களை மூடியபடிக் கேட்டேன்.

இதைப் படிப்பதை நிறுத்தி விட்டு தயவுசெய்து இதைக் கேட்டுப் பாருங்கள்.  எட்டு நிமிடம்.  நீங்கள் ஒரு serene feeling-ஐ உணரவில்லையானால் நான் உங்கள் அடிமை. 

அடர்த்தியான காடு.  சுற்றிலும் வானளாவி நிற்கும் தேவதாரு மரங்கள். காலை நேரம்.  எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா எனத் தயங்கும் சூரியன்.  கூட இந்த இசை.

கொஞ்ச நேரம் கழித்து அங்கே வந்தார் பாயல்.  நீங்கள் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தேன், உங்களுக்குப் பிடித்தமானவராக இருக்கும் என்றுதான் இதைப் போட்டேன் என்றார்.  Divenireஐ ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன் என்றேன்.  எனக்குப் பிடித்தது Primavera என்று சொல்லி விட்டு அதையும் போட்டார்.  பாயல் பஞ்சாபிப் பெண்.  என் எழுத்தில் பிரியமுள்ளவர்.

தமிழ்ச் சூழலிலேயே இயங்கிக் கொண்டிருந்தால் இது கஷ்டம்.  இப்போது நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் இது:

The Sound of Things Falling – Juan Gabriel Vasquez

Naked in Exile – Khalil Havi

A Dictionary of Maqiao – Han Shaogong

Red Dust: A Path Through China – Ma Jian

Rebel Sultans  – Manu S. Pillai

Celestial Bodies – Jokha Alharthi

The Flying Mountain – Christoph Ransmayr

Z213 : Exit – Dimitris Lyacos

இன்னும் இப்படி இருபது முப்பது புத்தகங்கள் உள்ளன.  அவற்றின் பெயர்களை இப்போதைக்கு சொல்லக் கூடாது.  அடுத்த ஆண்டுதான் சொல்ல முடியும்.  இந்த நிலைமையில் நான் எப்படி இளம் எழுத்தாளர்களின் எழுத்தைப் படிக்க முடியும்? 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai