What is love? – a “short” story by Araathu

என் எழுத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், எனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக எந்தச் சலுகையும் கொடுக்க மாட்டேன் என்பது.  சில நியாயவாதிகள்  வேண்டியவர்கள் என்பதற்காகவே கடுமையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று கொடுமையாக நடந்து கொள்வார்கள்.  காமராஜர் அவருடைய அம்மாவிடம் நடந்து கொண்டதை அப்படித்தான் சொல்ல வேண்டும்.  நான் அப்படி அல்ல.  வேண்டியவர் வேண்டாதவர் எல்லாம் எனக்கு ஒன்றுதான்.  நன்றாக இருந்தால் பாராட்டுவேன்.  நன்றாக இல்லை என்றால் திட்டுவேன் என்று எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.  திட்ட மாட்டேன், அங்கிருந்து ஒதுங்கிப் … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)

நினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது.  அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா?  அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார்.  எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.  அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன்.  அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன்.  உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார். thanks for your view … Read more

சாதத் ஹஸன் மண்ட்டோ

எக்ஸைல் மறு உருவாக்கம் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஏழாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம்.  அந்த வேலைக்க்குள் நுழைவதற்கு முன் வாசகர் வட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக எட்டிப் பார்த்த போது இந்தச் சிறிய குறிப்பு கிடைத்தது.  நிஜந்தன் தோழன் எழுதியிருக்கிறார்.   சாதத் ஹஸன் மண்ட்டோவின் எழுத்தைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.  எனக்கு மிக நெருக்கமாக நான் உணரும் எழுத்தாளர்களில் மண்ட்டோவும் ஒருவர்.  தமிழில் மொழிபெயர்த்த ராமாநுஜம் மிகுந்த பாராட்டுக்கு … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்?

அராத்துவின் பையன் பெயர் ஆழிமழைக் கண்ணன்.  இப்படியெல்லாம் பெயர் வைக்காதீர்கள் என்று எவ்வளவோ மன்றாடினேன்.  அவர் கேட்கவில்லை.  தாஸ்தாயேவ்ஸ்கி, ப்யூகோவ்ஸ்கி, போர்ஹேஸ் என்றெல்லாம் வெளிநாட்டுக்காரன்கள் பெயர் வைக்கிறார்கள்.  அதை நம் ராமகிருஷ்ணன், போர்ஹே, தாஸ்தாவேஜ்ஸ்கி என்று உச்சரிக்கும் போதுஎவ்வளவு கோபப்படுகிறீர்கள்.  Jodorovsky என்ற பெயரை ஹொடரோவ்ஸ்கி என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று எங்களையெல்லாம் எவ்வளவு டார்ச்சர் செய்தீர்கள்…  அதே போல் அவன்களும் என் மகன் பெயரை ஆழிமழைக் கண்ணன் என்று சொல்லட்டும் என்றார் அராத்து. அது சரி, … Read more

இமயம் – புகைப்படங்கள் – கணேஷ் அன்பு

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து அனுபவிக்கவும்.  ஒவ்வொரு புகைப்படத்தையும் க்ளிக் செய்தால் பெரிய அளவில் பார்க்கலாம். http://www.flickr.com/photos/101011245@N06/sets/72157635299944298/

ஒரு சிறிய பயணம்…

ராமநாதபுரத்தில் நண்பர் டிமிட்ரி திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்.  7-ஆம் தேதி மதியம் வைகை எக்ஸ்பிரஸில் நானும் அராத்துவும் கிளம்பி, 7-ஆம் தேதி இரவு மதுரையில் தங்குதல். டேய் மனோ, பூர்ணா,  மனாசே ராஜா இணைந்து கொள்வார்கள்.8-ஆம்தேதி மதிய உணவு முடித்து ராமநாதபுரம் பயணம். 8-ஆம் தேதி இரவு அங்கு தங்கி, 9-ஆம் தேதி திருமணம் முடிந்ததும் மதியம் கிளம்பி 9-ஆம் தேதி இரவும் மதுரையில் தங்குதல். 10-ஆம் தேதி காலை நானும் அராத்துவும் ஈரோடு செல்கிறோம்.  … Read more