ஒரு சிறிய பயணம்…

ராமநாதபுரத்தில் நண்பர் டிமிட்ரி திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்.  7-ஆம் தேதி மதியம் வைகை எக்ஸ்பிரஸில் நானும் அராத்துவும் கிளம்பி, 7-ஆம் தேதி இரவு மதுரையில் தங்குதல். டேய் மனோ, பூர்ணா,  மனாசே ராஜா இணைந்து கொள்வார்கள்.

8-ஆம்தேதி மதிய உணவு முடித்து ராமநாதபுரம் பயணம். 8-ஆம் தேதி இரவு அங்கு தங்கி, 9-ஆம் தேதி திருமணம் முடிந்ததும் மதியம் கிளம்பி 9-ஆம் தேதி இரவும் மதுரையில் தங்குதல்.

10-ஆம் தேதி காலை நானும் அராத்துவும் ஈரோடு செல்கிறோம்.  அன்று இரவு ஈரோட்டில் தங்கி விட்டு, 11, 12, 13 ஆகிய மூன்று தினங்களும் ஆழியாறில் தங்குகிறோம்,  நண்பர்கள் ரமேஷ், ஸ்ரீதர், பிரகாஷ், விஜி, சந்த்ரு ஆகியோருடன்.

இடையில் இரண்டு வேலைகள்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சமான கடம்ப மரத்தை தரிசிக்க வேண்டும்.  கடம்பம் ஈரோட்டுக்கு அருகில் உள்ள மாமரத்துப் பாளையத்திலும் இருக்கிறதாம்.  அதையும் தரிசிக்க வேண்டும்.  இப்போதெல்லாம் மரங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா?  அதன் ஒரு பகுதியே இந்த தரிசனம்.

அடுத்து, சதுரகிரிக்கு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்.  அங்கேதான் போகர் பழனிமலையில் உள்ள முருகரின் நவபாஷாண சிலையைக் கட்டினார் என்று சொல்கிறார்கள்.  கோரக்கர் தவம் செய்த இடமும் சதுரகிரியில்தான் இருக்கிறது.  யார் யார் என்னோடு வருகிறீர்கள், எப்போது செல்லலாம் என்று மெயில் செய்யவும்.  சதுரகிரியை நான் இதுவரை பார்த்ததில்லை.  பழனிக்குச் சென்றும் மலை மேல் ஏறாமல் வந்து விட்டேன்.

charu.nivedita.india@gmail.com

Comments are closed.