தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)

3050_588400421219181_1991565233_nநினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது.  அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா?  அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார்.  எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.  அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன்.  அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன்.  உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார்.

thanks for your view ; presume he is 4+years (since he is about to start his kindergarden schooling) ; in that scenario he would be repeating what he is fed by his parents- i could not understand a small kid understanding and comparing tamil literature- specifically of yours/jeyamohan’s. I view this as parents feeding the kid of their perceptions.( i could compare this with the record dances kids are forced to dance in cultural(?) programmes now a days in schools)…

தயவு செய்து என் சிறிய குறிப்பை வாசகர்கள் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அன்பர் ஆழிக்கு நான்கு வயதுக்கு மேல் இருக்கும் என்று அனுமானிக்கிறார்.  ஏன் சாமி, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்னை சாரு என்று அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?  ஆழிமழைக் கண்ணனுக்கு ரெண்டு வயது.  ஒரு குழந்தையைப் பாராட்டினால் கூட எனக்குத் திட்டா?  ம்…?  ரொம்பக் கொடுமையாக இருக்கிறது.  எழுத்துக்கு இடையே என்ன உள்ளது, நான் சூசகமாக என்ன சொல்ல வருகிறேன் என்றெல்லாம் பார்க்க வேண்டாமா?  நான் எழுதியது ஒரு கிண்டல்.  கிண்டலைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்களோடு உரையாடுவதும் அவர்களுக்காக எழுதுவதும் மிகப் பெரிய சித்ரவதை.  ஒரு கிண்டல் கட்டுரை ஒரு வதை கட்டுரையாக மாறி விட்டது பாருங்கள்.  இப்போது நான் எழுதிக் கொண்டிருப்பது வதை கட்டுரை.

இன்னொரு முக்கியமான விஷயம்.  இந்த இலக்கிய விஷயத்தையெல்லாம் ஆழிமழைக் கண்ணன் என்ற ரெண்டு வயதுக் குழந்தைக்கு அவனுடைய அப்பா சொல்லிக் கொடுத்து சொல்கிறார் என்பது எவ்வளவு மொண்ணைத்தனமான வாதம்?  அப்படியிருந்திருந்தால் அதைக் கூட புரிந்து கொள்ளத் தெரியாத மடையனா நான்?

விஷயம் என்னவென்றால், இலக்கியவாதிகள் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்? என்று கேட்கிறார் பிச்சை.  உடனே ஆழி, அவுங்கள அடிக்கலாம் என்கிறான்.  வேற என்ன செய்யலாம்? என்று உப கேள்வி கேட்கிறார் பிச்சை.  ஆழி சுடலாம் என்கிறான். 

இதில் உள்ள nuance ஐ கவனியுங்கள்.  அவனுக்கு சண்டை என்ற வார்த்தை புரிகிறது.  சண்டை போடுகிறவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்து அடிக்கலாம் என்கிறான். 

பெண் கவிகளைப் பற்றிக் கேட்கும் போதும் பிச்சை கேட்டதற்கு தண்டம், நான் கேட்டதற்கு வேஸ்ட் என்கிறான். சொல்லிக் கொடுத்தால் ஒரே பதிலை அல்லவா சொல்ல வேண்டும்?

கொடுமை சாமி கொடுமை.  ஒரு ரெண்டு வயதுக் குழந்தையைப் பாராட்டுவதில் கூட இவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டுமென்றால் இந்த நாட்டில் வாழவே நான் லாயக்கு இல்லை என்று தெரிகிறது.  ஒட்டு மொத்த சமுதாயமும் சீரழிந்து விட்டது.  இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

எனக்குப் பொதுவாகக் குழந்தைகளைப் பிடிக்காது.  காரணம், அவர்களின் வன்முறை.  ஒரு நண்பரின் வீட்டுக்குப் போனேன்.  போன உடன் என் செல்ஃபோனைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, டேய் கொங்க்கால ஓளி  நாயே பொறுக்கிப் பையா என்று என்னைப் பார்த்துத் திட்டிக் கொண்டே அந்த வீடே இடிந்து விழுவது போல் கத்தினான்.  கழுத்து நரம்பெல்லாம் புடைத்தது.  கண்கள் சிவந்து விட்டன. 

என் நண்பரோ ரொம்ப மகிழ்ந்து சிரித்தபடி ஏண்டா கண்ணு அங்கிளை திட்டுறே, குடுத்துடு செல்லம் போனை என்று கொஞ்சினார்.  அவந்திகாவும் வந்திருந்தாள். 

தரையில்தான் அமர வைக்கப்பட்டோம்.  நண்பர் பணக்காரர்.  சோபா எல்லாம் சுக்குநூறாகக் கிழிந்திருந்தது.  பையன் கிழித்து விட்டான் என்றார் அப்பா நகைச்சுவையாக.

டேய் பேமானி, புண்ட மவனே, பொறுக்கி வெளிய போடா என்று மீண்டும் கத்தினான் சிறுவன்.  அப்பாவிடமும் அவனை வெளிய போகச் சொல்லு போனைத் தர்றேன் என்று கத்தினான். 

நீ போனைக் குடுத்தா தானேடா செல்லம் அவர் போக முடியும்? என்றார் அப்பா, என் நண்பர்.

அப்போதுதான் உள்ளேயே நுழைந்திருந்தோம்.  நண்பரின் வற்புறுத்தலால் சென்றோம். 

ரொம்ப நேரம் மேற்கண்டவாறு திட்டினான்.  கடைசி வரை போனைக் கொடுக்கவில்லை.  நானும் அவந்திகாவும் வெளியே வந்தோம்.  பையன் போனை அப்பாவிடம் கொடுத்தான்.  அப்பா வெளியே வந்து போனை என்னிடம் கொடுத்தார். 

சிரித்துக் கொண்டே, வாஞ்சை வார்த்தைகளில் ஒழுக, வழக்கமா போனைத் தூக்கிப் போட்டு உடைச்சுடுவான், இன்னிக்கு நல்ல மூட்ல இருக்கான் என்றார். 

அடங்கொக்கா மக்கா என்று நினைத்துக் கொண்டு ஓடி வந்துதான் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற கட்டுரை எழுதினேன். அந்த லூசு இப்போது டான் போஸ்கோ பள்ளியில் பிரமாதமாகப் படிப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். 

முட்டாப் புண்ட, நாயே, பேயே என்று அந்தப் பையன் திட்டினான் அல்லவா, அப்போது அவனுக்கு நாலு வயது.  பள்ளிக்கூடத்திலேயே சேர்க்கவில்லை. 

அவன் இதையெல்லாம் யாரிடம் கற்றிருப்பான், அவனுக்கு என்ன பிரச்சினை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.  அப்பா ரொம்ப சாது.  அம்மாவோ இருக்கும் இடம் தெரியாது. அவனுக்கு ஏன் என் மீது கோபம் என்றும் இந்தக் கணம் வரை தெரியாது.

ஆனால் எனக்கு அதில் ஆச்சரியமும் இல்லை.  ஏனென்றால், இது போல் நான் ஒரு டஜன் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில்தான் ஆழிமழைக் கண்ணன் என்னை ஆச்சரியப்படுத்தினான்.  ஒவ்வொருவரிடம் உங்கா பேர் என்னா என்பான்.  சொன்னதும் ஓ என்று சொல்லி அதைத் திருப்பிச் சொல்வான்.  உங்கா பேர் என்னா என்று ராஜ ராஜேந்திரனைக் கேட்டான்.  அவர் சொன்னார். ஓ, ராஜ ராஜேந்திரன் என்று சொல்லித் தலையாட்டினான்.  மேலும், அவன் என்னை தாத்தா என்று அழைத்திருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  அப்படித்தான் அவன் என்னை அழைத்திருக்க வேண்டும்.  ஆனால் அவன் சாரு என்று அழைத்தான்.  என் பக்கத்திலேயே இருந்த ராகவனிடமோ மற்றவர்களிடமோ அவன் பேசவே இல்லை.  அவர்களெல்லாம் தன் ஜமா இல்லை என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

வாசகர் வட்டத்தில் அந்த அன்பர் குழந்தையையும் என்னையும் திட்டி எழுதியதற்கு அராத்து இப்படி பதில் எழுதியிருந்தார்.

”சாரு எழுதியதில் இலக்கிய பேட்டி என்பது காமடி. அவனுக்கு 2 + வயது ஆகிறது . அவன் எத்தனை என்றாலே , 2 என்பான் . நான் ஒரு எழுத்தாளர் எத்தனை நாவல் வருடத்துக்கு எழுதலாம் என்றால் 2 என்பான் , அதான் டெக்னிக் . சொல்லியெல்லாம் கொடுக்கவில்லை.

அடுத்து இந்த விஷயத்தால்யாராவது அவனை புத்திசாலி என்று சொல்வார்களா ? சாரு அவனுடன் 1 மணி நேரம் இருந்தார் , அவன் பழகிய விதம் , சாரு சாரு என விளித்து இவரிடம் பல கேள்விகள் கேட்டன் , அதனால் சாரு அப்படி சொல்லியிருக்கக்கூடும்.

மற்றபடி பதற்றம் வேண்டாம் . அவன் முட்டாளாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.”

இப்போது நண்பருக்குப் பதற்றம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  இன்னொரு சோகம், நான் குழந்தைகளைப் பிடிக்காது என்று எழுதியபோதும் என்னைத் திட்டினார்கள், வக்கிரம் பிடித்தவன் என்று.  இப்போது குழந்தையைப் பாராட்டி எழுதினாலும் திட்டுகிறார்கள்.  சீக்கிரம் இந்தியாவை விட்டு ஓடி விட வேண்டும்.  மொழிபெயர்ப்பாளர்களே, விரைந்து செயல்படுங்கள்.  ஒரு சமூகமே மனநோய் விடுதியாக மாறி விட்ட பிறகு இங்கே என்னைப் போன்றவர்களுக்கு வேலையே இல்லை.       

 

 

Comments are closed.