என் எழுத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், எனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக எந்தச் சலுகையும் கொடுக்க மாட்டேன் என்பது. சில நியாயவாதிகள் வேண்டியவர்கள் என்பதற்காகவே கடுமையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று கொடுமையாக நடந்து கொள்வார்கள். காமராஜர் அவருடைய அம்மாவிடம் நடந்து கொண்டதை அப்படித்தான் சொல்ல வேண்டும். நான் அப்படி அல்ல. வேண்டியவர் வேண்டாதவர் எல்லாம் எனக்கு ஒன்றுதான். நன்றாக இருந்தால் பாராட்டுவேன். நன்றாக இல்லை என்றால் திட்டுவேன் என்று எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். திட்ட மாட்டேன், அங்கிருந்து ஒதுங்கிப் போய் விடுவேன். அப்புறம் ஏன் பரதேசி படத்தைத் திட்டினீர்கள் என்கிறீர்களா, அது ஒரு கலாச்சார அரசியல் பிரச்சினை. பாலா எடுப்பதுதான் உயர்ந்த சினிமா என்பதாக இங்கே ஒரு நம்பிக்கையும் கட்டுக்கதையும் உருவாகி விட்டது. அது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எனக்கு இருந்ததால் அப்படி எழுதினேன். ஆனால் இனிமேல் அதுகூட தேவையில்லை என்று நினைக்கிறேன். நல்லதை மட்டும் சுட்டிக் காட்டுவோம், மற்றபடி ஒதுங்கி விடுவோம் என்ற மனோபாவம் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் அராத்து எழுதிய ஒரு சிறிய பத்தியை கொஞ்ச நேரம் முன்பு படித்தேன். அது ஒரு சாதாரண விஷயம். மனைவி மற்றும் மகனோடு ஒருவர் பறங்கிமலை போகிறார். அங்குள்ள தேவாலயத்தையும் பார்க்கிறார்கள். திரும்பி வருகிறார்கள். இவ்வளவுதான் விஷயம். ஆனால் இந்த விஷயத்தை ஒரு அற்புதமான சிறுகதையாக மாற்றி விட்டார் அராத்து. ஒரே ஒரு பிரச்சினை. வழக்கம் போல் ஒற்றுப் பிழைகள், இலக்கணப் பிழைகள் உள்ளன. இந்தக் குட்டிக் கதையில் 11 இடங்களில் அப்படிப்பட்ட பிழைகள் இருக்கின்றன. நேரம் இல்லாததால் திருத்தவில்லை. உங்கள் கதைகள் அனைத்தும் பிரசுரமாகும் போது என்னிடம் ஒருமுறை கொடுங்கள் அராத்து, நான் பிழைதிருத்தம் செய்து தருகிறேன். இவ்வளவு நல்ல கதைகளுக்காக என் நேரத்தைச் செலவிடலாம், தப்பில்லை. இப்போது நேரமில்லை. அவ்வளவுதான்.
Donald Barthelme ஒரு காலத்தில் ரொம்பச் சிறிய சிறுகதை என்று சொல்லி குட்டிச் சிறுகதைகள் எழுதுவார். அந்தத் தரத்தில் இருக்கிறது இந்தக் குட்டிச் சிறுகதை. இதைச் சிறுகதையாக மாற்றுவது அந்தக் கடைசி வாக்கியம்தான். இனி வருவது கதை:
நேற்றுமாலைசெயிண்ட்தாமஸ்மலைக்குபையனைஅழைத்துசென்றிருந்தேன். மலைஎன்றதும்முதலில்தனியாகநடக்கபயந்தான். சிறிதுநேரம்கையைபிடித்தபடிநடந்துமேட்டர்பழகியதும்தனியாகஓடஅங்குமிங்கும்ஓடஆரம்பித்தான்.
காதலர்கள்சென்னையில் ” ஒதுங்க ” இடமில்லாமல்தவித்துகிடைக்குமிடங்களில்எல்லாம்ஒதுங்குவதால் ,” ஜோடிகள்உலாவரவும்உட்காரவும்தடை “எனபோர்டுதெரிவித்தது. நிர்வாகத்தைஎப்படியெல்லாம்தர்மசங்கடப்படுத்தியிருப்பார்களோ!
இப்போதுமலையில்நுழையவேசெக்போஸ்ட்போட்டுசெக்யூரிட்டி. நான்பேச்சிலராகஇருந்தபோதுசரக்குவாங்கிக்கொண்டுஇந்தமலைக்குசென்றுவிடுவோம்.யாரும்இருக்கமாட்டார்கள் , யாரும்தடுக்கமாட்டார்கள். நோலாஸ்ட்ஆர்டர்பிராப்ளம். ஆங்காங்கேபைக்குகள்ஓரமாகநிற்கும் . ரசனையாளர்கள்சிலர்மட்டும்அமைதியாககுடித்துக்கொண்டுபேசிக்கொண்டுஇருந்துவிட்டுகலைந்துவிடுவோம்.
கொஞ்சம்ஓவரானால்அங்கே 45 டிகிரியில்ஒருரோடுமேலேஏறும் , அதில்பைக்கில்சிங்கிள் , டபுள்ஸ் , டிரிபிள்ஸ்எனஏறிபார்ப்போம்ஏசுவின்கருணையால்எந்தஅசம்பாவிதமும்ஏற்பட்டதில்லை.
என்பையனைசர்ச்சுக்குள்அழைத்துசென்றுமேரியையும் , ஏசுவையும்மேரி & ஜீஸஸ்எனஅறிமுகப்படுத்தினேன். சர்ச்சின்உள்ளேமிகக்குறைவானசிலரேஇருந்தனர்.
அவன்சத்தமாகஜீஸஸ்என்னாபண்ணுவாருஎன்றான்.
சொல்றேன், சத்தம்போடாதடாஎன்றேன் .
அவன்மீண்டும்சத்தமாகஜீஸஸ்என்னாபண்ணுவாருஎன்றான்.
சிலர்புன்முறுவலோடுஅவனைநிமிர்ந்துபார்த்தனர். நான்என்னசொல்லப்போகிறேன்என்றஆர்வமும்இருந்தது.
ஜீஸஸ்எல்லாரையும்லவ்பண்ணுவாருடாஎன்றேன்.
லவ்வுன்னாஎன்னாஎன்றான்.
அப்போதுதான்நியாபகம்வந்தது. திடுக்கிட்டநான், இவனைபிடிடிஎனமனைவியிடம்கொடுத்துவிட்டு , போனைஎடுத்துக்கொண்டுஆள்அரவமற்றஇடத்தைநோக்கிநடக்கத் தொடங்கினேன்.