பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது

“பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது” ராஜமுத்திரை மார்ச் 22, 2006 பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் … Read more

உன்மத்த ஸ்பரிசம் – ஸ்ரீ

உன்மத்த ஸ்பரிசம் – ஸ்ரீ முடிவற்ற நீள் பாதையில் போவதும் வருவதுமாக இருந்திருக்கிறேன் காலத்தைத் தொலைத்தபடி சினந்து சுயமிழந்த சந்தர்ப்பங்களில் இசையெனும் கருங்கடலின் ஓங்காரத்தில் பித்துப் பிடித்து மூழ்கித் தொலைந்திருந்த வேளைகளில் கடந்த நூற்றுப் பதினாறு நிமிடங்களாக இசையில் தொலைந்து கொண்டிருக்கவும் இல்லை சீற்றத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கவும் இல்லை உன்னோடு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவுடன் கால்கள் நிற்கவில்லை வலியில் கெஞ்சவும் இல்லை நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லை அம்மீச்சிறு உன்மத்த கணத்தை அடைவதற்காக தன்வயமற்றுப் போயிருந்திருக்கிறேன் … Read more