NH 10 – சாரு: மதுரை ஆசைத்தம்பி

மதுரை ஆசைத்தம்பி எழுதியது: சாருவை நீங்கள் பெண்ணாகப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நான் பார்த்தேன். தான் மாறியதோடு நில்லாமல் உங்களையும் ஒரு பெண்ணாக மாற்றி இருப்பார். எங்கே? எப்படி? என்று எழும் வினாக்களுக்கான விடை ஒரு சிறிய கட்டுரையில் உள்ளது. அந்தக் கட்டுரை பெயர். NH -10. பெண்களின் வலிகளை வரிகளாக வரைந்திருக்கும் அந்தக் கட்டுரை சாருநிவேதிதாவின் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை. எழுத்தாளர்களுக்கு சாதி மதம், இனம், தேசம் குடும்பம் என்ற … Read more

சும்மா கிடந்த சங்கு

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல சீனி ஒரு கதையை அனுப்பிப் படித்துப் பார்க்கச் சொன்னார். சு. வேணுகோபால் எழுதிய உள்ளிருந்து உடற்றும் பசி என்ற கதை. எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட அந்தக் கதையைப் படித்தேன். கோவில் வாசலில் தன் சீழ் வடியும் புண்ணைக் காண்பித்துப் பிச்சையெடுக்கும் காட்சிதான் நினைவு வந்தது. கதை அத்தனை அருவருப்பு. கடைசி வாக்கியத்தில் வரும் இன்செஸ்ட் அல்ல; அதில் வரும் ஜவுளிக்கடை வர்ணணை. ஞாபக சக்தி உள்ள ஒரு ஒம்பதாம் கிளாஸ் … Read more

அஞ்சலி: ரணஜித் குஹா (1923-2023) | ஆளப்படுபவர்களின் வரலாறு: ரவிக்குமார்

நான் அடிக்கடி வரலாற்றறிஞர் ரணஜித் குஹா பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிடுவது வழக்கம். அவர் சமீபத்தில் தன் நூறாவது வயதில் ஆஸ்திரியாவில் மறைந்தார். குஹா என் ஆசான்களில் ஒருவர். அவருடைய ஸபால்ட்டர்ன் ஸ்டடீஸ் இல்லாவிடில் ஔரங்ஸேப் நாவல் இல்லை. அவர் பற்றிய நண்பர் ரவிக்குமாரின் முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்கிறேன். நன்றி: இந்து தமிழ் திசை.

ஒடியல் கூழ்

வவுனியாவில் இரண்டு தினங்கள் தங்கிவிட்டு இப்போது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணம் போன பிறகுதான் எந்த விடுதியில் தங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அங்கே ஒடியல் கூழ் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. ஆனால் யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. 50 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் நான். யாழ்ப்பாணமும் தமிழ் பேசும் நிலம்தான். அங்கே எனக்கு ஒடியல் கூழ் கொடுக்க ஒரு ஆள் இல்லை. ரெஸ்டாரண்டில் கிடைக்குமா என்று … Read more

விருது மறுக்கப்பட்டது தொடர்பாக: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

அன்புள்ள சாரு, இன்றுதான் தங்களுக்கு விருது மறுக்கப்பட்ட நிகழ்வை முழுமையாக அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மூன்றாம் உலக நாடுகளின் தனித்துவமான அரசியல் சமூக நிலைமைகளை, குறிப்பாக நகரங்களில் நிலவும் பிறழ்வுகளை எழுதுவதின் வாயிலாக விவரிப்பவை மட்டுமல்ல, மிக அதிமாக சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களின் மத்தியில் உடலின் தன்னாட்சியை (autonomy) முன்னிறுத்தும் படைப்புகள் தங்களுடையவை. என்றாலும், ஃபாசிச எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தக் கூடியவை. குறிப்பாக மத விவகாரங்களில் தங்களது ஹை-பிரிட் தன்மை முழுக்க ஒழுங்குகள், சடங்குகளால் அன்றி, உணர்வு, இசை … Read more