அடியேனைப் பற்றி அராத்து

பின்வரும் பொன்மொழிகள் அடியேனைப் பற்றி அராத்து எழுதியிருப்பது. சாரு நிவேதிதாவை பற்றி பெரும்பாலும் நான் எங்கும் எழுதுவதில்லை.அவர் என்னை அடிக்கடி பாராட்டி தள்ளி சாருவை தெரிந்த அனைவருக்கும் அராத்துவையும் தெரியும்படி வைத்து விட்டார். சச்சின் லோக்கல் கிரவுண்டில் ஆடும் ஒரு சிறுவனை பாராட்டுகிறார் என வைத்துக்கொள்வோம் , பதிலுக்கு அந்த பயலும் சச்சின் திறமையான ஆட்டக்காரர் என பாராட்டினால் எப்படி ? அந்த லூஸுத்தனத்தையும் வலிய போய் ஏன் செய்யணும் என்றுதான். அ:அடுத்து , இணையத்தில் பலராலும் … Read more

50 Writers 50 Books

50 Wrtiers 50 Books என்ற புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  Harper Collins பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.  இந்தியாவின் மிகச் சிறந்த ஐம்பது புத்தகங்களில் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தெரிவு செய்யப்பட்டு அதைப் பற்றி ஒரு கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.  இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்களில் ஒருவரான Chandra Siddan தான் ஸீரோ டிகிரி பற்றிய கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.  அந்தக் கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?  Dick wants (to be) Cunt  எவ்வளவு பொருத்தமான … Read more

இமயமலைப் பயணம் (2)

மே 17, 18 தேதிகளில் மாசாணி அம்மனை தர்ஸித்து விட்டு 19-ஆம் தேதி காலை பத்து மணி அளவில்  பொள்ளாச்சியிலிருந்து நெல்லியம்பதி கிளம்புகிறேன்.  நெல்லியம்பதி ஒரு அற்புதமான மலை வாசஸ்தலம்.   திருப்பூரில் எனக்கு அலெக்ஸ் என்று ஒரு நண்பர் உண்டு.  வருஷத்துக்கு ஒருமுறை தொடர்பு கொண்டு சந்திப்போம்.  இப்போது நான் பொள்ளாச்சி வருவது அறிந்து தொடர்பு கொண்டார்.  அவருடன்  19 காலை பத்து மணி அளவில் கிளம்பி நெல்லியம்பதி செல்கிறேன்.  அன்று பூராவும் மறுநாள் காலையும் … Read more

இமயமலைப் பயணம்

அடுத்த வருடம் ஜூலை மாதம் காசா கல்பா கேலாங்க் லே ல்டாக் ஶ்ரீநகர் போன்ற இடங்களுக்கு பைக்கில் பயணம் போகலாம் என்பது அராத்துவின் யோசனை.  சில நண்பர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர்.  வர விரும்புபவர்கள் தனியாக பைக் எடுத்து வரவேண்டும்.பில்லியன் பயணம் வேலைக்காகாது என்று எழுதியிருக்கிறார் அராத்து.   சிறந்த பைக்குகள் – பல்சர், அவெஞ்சர், என்ஃபீல்டு , ஹார்லி டேவிட்ஸன். எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது.  அதனால் பல்ஸர் போன்ற பெயர்களையும் அறியேன்.  அந்தக் … Read more

கோவை: வாசகர் சந்திப்பு

மாசாணி அம்மனை தர்ஸித்து விட்டு 19-ஆம் தேதி மாலை கோவை வருவேன்.  20 முழுவதும் கோவையில் இருப்பேன்.  அப்போது வாசக நண்பர்களை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். charu.nivedita.india@gmail.com

மாசாணி அம்மன்

17, 18, 19 தேதிகளில் மாசாணி அம்மனை தர்ஸிக்க ஆனைமலை செல்ல இருக்கிறேன்.  அந்தத் தேதிகளில் பொள்ளாச்சியில் இருப்பேன்.  ஆனைமலையில் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமண குகை இருப்பதாகவும் அறிகிறேன்.  அங்கேயும் போக வேண்டும்.  ஆதலால்,  இந்தத் தேதிகளில் என்னால் நண்பர்களை சந்திக்க முடியாது என்று நினைக்கிறேன்.  அதனால்  20, 21 தேதிகளில் கோவையில் தங்கலாமா என்று யோசிக்கிறேன்.  21-ஆம் தேதி விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்து விடலாம் என்று திட்டமிடுகிறேன்…  கோவை நண்பர்கள் … Read more