பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி?

என் நண்பர் ராமசேஷனும் நானும் இணைந்து “பிழையில்லாத தமிழ் எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். வேறு ஏதாவது வசீகரமான தலைப்பு இருந்தால் நண்பர்கள் சொல்லலாம். (இதுவே இப்போதைய இளவட்டங்கள் என்றால் வேறு ஏதாவது அட்ராக்டிவ் தலைப்பு இருந்தால் சொல்லலாம் என்று எழுதுவார்கள். அட்ராக்டிவ் என்பதற்கு உடனடியாக அவர்களுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்று ஞாபகம் வராது. யோசிக்கவும் நேரம் இருக்காது. அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழ்ப் பணி செய்தால் இதுவே அதிக பட்சம்). … Read more

எங்கே உன் கடவுள்?

கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்துகொள்வதல்ல. சமரசம் என் ஆன்மாவில் படியும் கறை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. சொல்லப்போனால் துக்ளக்கில் எழுதியபோது எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதற்கும் நான் அஞ்சவில்லை. எனக்கு 9 வயதுச் சிறுமியிடமும் 90 வயது முதியவரிடமும் சொல்வதற்குச் செய்திகள் இருக்கின்றன. துக்ளக் கட்டுரையைப் … Read more

கலகம் காதல் இசை

கலகம் காதல் இசை என்ற நூலை பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரு நாளில் முடிக்க வேண்டிய நூல்.  பிழைகளும் அதிகம் இல்லை.  ஆனால் நான் பிழை திருத்தம் செய்யும் போது அந்த நூலைத் திரும்பவும் ஒருமுறை எழுதுவதாகவே சொல்ல வேண்டும்.  உதாரணமாக, ”Sleimane Benaissa என்ற அல்ஜீரிய நாடகாசிரியர்” என்று வரும் போது அதில் ஒன்றும் பிழை இல்லையே என நான் தாண்டிப் போக மாட்டேன்.  அல்ஜீரியப் பெயர்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு அதில் e வராது … Read more

புத்தகங்கள்

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து யாரும் இந்தியா வருகிறீர்களா? வருவதாக இருந்தால் ஒரு உதவி. நான்கு சிறிய புத்தகங்களை எடுத்து வர முடியுமா? அவற்றை என் நண்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவார். இந்தியா வந்ததும் என் முகவரிக்கு அனுப்பி விடலாம். ஏன் எழுதுகிறேன் என்றால், சுரைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்று ஆகி விடுகிறது தபால் செலவு. அதனால் கேட்கிறேன். charu.nivedita.india@gmail.com

cat food

நான் என்னுடைய தினசரி வாழ்க்கை முறை பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியும் அதையெல்லாம் படிக்காமல், அல்லது, படித்தும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப எனக்கு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தால் நானும் என் வேலையையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப என் தினசரி வாழ்க்கை பற்றித்தான் எழுதிக் கொண்டிருப்பேன்.  வேறு வழியே இல்லை.  என்னை ங்கொம்மா ங்கோத்தா என்று திட்டி வரும் கடிதங்களைப் பற்றி நான் கவலையே படுவதில்லை. குப்பைக்கூடையில் போட கண்ணிமைக்கும் நேரம்.  அந்த ஆளுக்காகப் பரிதாபப்பட … Read more

அவர் பெயர் ராமசேஷன்

ராமசேஷன் ஒரு ஸாஃப்ட்வேர் எஞ்ஜினியர்.  ஆனாலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஐந்து ஆண்டுகள் படித்து புலவர் பட்டம் பெற்றவரை ஒத்த தமிழ்ப் புலமை உண்டு. அதற்கும் மேலும் என்று சொல்லலாம்.  வாழ்நாள் பூராவும் பழந்தமிழ் இலக்கியத்தில் ஊறினவர்.  வெண்[பா எழுதும் ஆற்றல் கொண்டவர்.  (நல்லவேளை, புதுக்கவிதை சமாச்சாரத்தில் இறங்கவில்லை). சமகால இலக்கியம் இப்போதுதான் பரிச்சயம்.  நாம் எல்லாம் தமிழ் எழுத்தாளர்களாக இருந்தும் இலக்கணம் பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஒற்றாவது மயிராவது என்று ஒற்று இல்லாமலேயே எழுதிக் காலம் கழிக்கிறோம். … Read more