பிக் பாஸ் – 3

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சாதியையும் நான் ஒரு இனக்குழுவாகவே பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு சாதிக்குமான கலாச்சாரம் இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் கூட சாதி ஒழிந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சில முற்போக்குவாதிகள் மற்றும் பிராமண எதிர்ப்பாளர்கள் சொல்வது போல், இந்து மதத்தில் மட்டுமே சாதி இருக்கிறது என்று சொல்வது அறியாமை. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு இனத்திலும் சாதி உண்டு. ஆஃப்ரிக்காவில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாதியும் ஒரு மொழியும் இருக்கிறது. … Read more

R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா

நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி.  அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள்.  தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார்.  ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல … Read more

பிக்பாஸ் – 3 சில விளக்கங்கள்

நேற்று பிக்பாஸ்-3க்கு வெளியே உள்ள, ஆனால் பிக்பாஸ் குழுவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். நண்பர் எனக்கு மிகவும் வேண்டியவர். தெரிந்ததை மட்டுமே பேசுவார். தெரியாத விஷயத்தைப் பற்றி வாயே திறக்க மாட்டார். பிக்பாஸ்-3இல் தர்ஷன் வெளியேறியது பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகளும் தவறு என்றார் நண்பர். ஏனென்றால், ஒரு போட்டியாளர் வெளியேறுவது என்பது முழுக்க முழுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளைப் பொறுத்தே இருக்கிறது. இந்த ஓட்டுகள், இவற்றின் எண்ணிக்கை எல்லாமே மிகவும் வெளிப்படையாக நடக்கின்றன. … Read more

மௌனமும் பேச்சும்…

நேற்று இரவு ஒன்பதரைக்கே உறங்கச் சென்று விட்டேன்.  அத்தனை அசதி.  நாள் பூராவும் செய்த ஒரே வேலை, படிப்பு.  ஒரு இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் – பத்து மணி நேரம் – உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் வலிக்கிறது.  உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை இருந்த இடத்திலேயே இருந்து, அங்கே இங்கே நகராமல், அசையாமல் படித்துக் கொண்டே இருந்து பாருங்கள்.  இடையில் போன் எதுவும் … Read more

முதல் வீடும் ரெண்டாம் வீடும்…

சமீபத்தில் நாகூருக்குச் சென்றிருந்தேன்.  நான் வசித்த கொசத்தெருவில் உள்ள நான் வளர்ந்த வீட்டுக்கும் சென்றேன்.  எப்போது நாகூர் போனாலும் கொசத்தெருவில் நான் வளர்ந்த வீட்டுக்குப் போவதுண்டு.  ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை வளர்ந்த வீடு.  அதற்கு முன்னால் வெங்கட்டு சந்து.  அது இப்போது பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது.  நாங்கள் இருந்த கொசத்தெரு வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாழ்கிறது.  ரொம்ப அருமையான மனிதர்கள்.  ஒவ்வொரு முறை நான் அங்கே போகும் போதும் என்னை … Read more

பொக்கிஷம் – 2

R.P. ராஜநாயஹம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதில் இது: இன்னும் அதிகம் அதிகம் அதிகம் எழுதுவதே எங்கள் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் எழுத இப்போது உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை இன்று. காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இப்போது சொன்னால் அப்படீனா என்னா என்றுதான் கேட்கும் நிலையில் இருக்கிறது இன்றைய தலைமுறை. இந்த நிலையில் சென்ற தலைமுறையை சென்ற தலைமுறையின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முக்கியமானவர்களுள் நீங்கள் ஒருவர். இரண்டு பெயர்கள் எனக்கு ஞாபகம் வருகின்றன. … Read more