ஒரு சந்திப்பு, ஒரு நாய்க்குட்டி, ஒரு கவிதை…

சமீபத்தில் ஒருநாள் திடீரென்று குமரகுருபரன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  கவிஞன் என்றால் என்னுள் கொண்டிருந்த பிம்பம் வேறு. பரட்டைத் தலை.  ஒல்லியான தேகம்.  பீடி.  ரப்பர் செருப்பு.  பசித்த பார்வை.  சரி, இப்போதைய கவிஞர்கள் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஆனால் பழைய கவியின் தோற்றத்திலிருந்து நேர் எதிராக இருந்து விடப் போவதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி மாறியிருக்கலாமே தவிர – பீடிக்கு பதிலாக சிகரெட், ரப்பர் செருப்புக்குப் பதிலாக வேறு ஒன்று என … Read more

ஒரு வேண்டுகோள்

பேசாமொழியில் எழுத இருக்கும் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடருக்காகக் கீழ்க்காணும் இரண்டு படங்கள் தேவைப்படுகின்றன, with English subtitles.  கிடைத்தால் சொல்லுங்கள்.  டிவிடி கிடைத்தால் சிலாக்கியம்.  பென் ட்ரைவில் இருந்தாலும் பிரதி எடுத்துக் கொண்டு கொடுத்து விடுவேன்.  இயக்குனர் பெயர்: Nelson Pereira dos Santos படங்களின் பெயர்: barren lives. the third bank of the river தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

ராஜாஜி நடத்திய ஸ்வராஜ்யா… மீண்டும்…

நேருவின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக 1956-இல் ராஜாஜி மற்றும் சுப்பராவ் இருவராலும் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ஸ்வராஜ்யா.  1972-இல் ராஜாஜியின் மரணத்துக்குப் பிறகு ஸ்வராஜ்யா அதன் முக்கியத்துவத்தை இழந்தது.  பின் 1980-இல் நின்று போனது. இந்தியா இன்று மனித வாழ்க்கைக்கு லாயக்கில்லாத இடமாக மாறிப் போனதற்குக் காரணம் இதுவரை இங்கே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி.  முக்கியமாக நேரு.  கம்யூனிஸ்டுகள் இந்தக் கட்சிக்கு மாற்றாக இருந்திருக்கலாம்.  ஆனால் அவர்கள் காங்கிரஸின் துணைக் கட்சியாகவே செயல்பட்டு ஆதாயம் அடைந்தார்கள்.  காங்கிரஸுக்கு … Read more

எழுத்தாளன் என்றால் என்ன?

எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதை ஒரு துளியளவும் புரிந்து கொள்ளாமல் யார் யாரிடமோ போய் விளக்கம் கேட்டு, அவர்களும் ஒன்றுமே புரியாமல் ஏதோ உளறி வைப்பதையெல்லாம் பிரசுரித்துக் கொண்டிருக்கிறார்கள்.   நான்  சொல்வது புரியவில்லையா, அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்று இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது.  எனவே அப்படிப்பட்டவர்களுக்காக இன்னும் விளக்கமாக எழுதுகிறேன். இப்போதாவது புரிந்து கொள்வார்களா அல்லது இப்போதும் புரிந்து கொள்ளாமல் தாத்தா பாட்டிகளிடம் போய் இதற்கு விளக்கம் கேட்பார்களா என்று … Read more

குற்றமும் தண்டனையும்

பெற்று வளர்த்த தாயின் தலையில் அம்மிக் குழவியைப் போட்டுக் கொல்லும் புதல்வர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம்.  சமீபத்தில் ஒரு பெண் தன் காதலனோடு சேர்ந்து கொண்டு தனக்குக் கணவனாக வரப் போகும் இளைஞனைக் கொன்றாள்.  மூன்று வயதுக் குழந்தையை வன்கலவி செய்து கொல்கிறார்கள்.  சமீபத்தில் கூட இரண்டு சிறுவர்களின் குதத்தில் வன்கலவி செய்து அந்தச் சிறுவர்களை ஆற்றில் அமுக்கிக் கொன்றார்கள் சிலர்.  இவர்களையெல்லாம் சவூதி அரேபியாவில் செய்வது போல் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று பலரும் … Read more