ராஜாஜி நடத்திய ஸ்வராஜ்யா… மீண்டும்…

நேருவின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக 1956-இல் ராஜாஜி மற்றும் சுப்பராவ் இருவராலும் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ஸ்வராஜ்யா.  1972-இல் ராஜாஜியின் மரணத்துக்குப் பிறகு ஸ்வராஜ்யா அதன் முக்கியத்துவத்தை இழந்தது.  பின் 1980-இல் நின்று போனது.

இந்தியா இன்று மனித வாழ்க்கைக்கு லாயக்கில்லாத இடமாக மாறிப் போனதற்குக் காரணம் இதுவரை இங்கே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி.  முக்கியமாக நேரு.  கம்யூனிஸ்டுகள் இந்தக் கட்சிக்கு மாற்றாக இருந்திருக்கலாம்.  ஆனால் அவர்கள் காங்கிரஸின் துணைக் கட்சியாகவே செயல்பட்டு ஆதாயம் அடைந்தார்கள்.  காங்கிரஸுக்கு மாற்றாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இடதுசாரிக் கொள்கைகளே ஆதிக்கத்தில் இருந்தன.

குறிப்பாக, அரசின் நிர்வாகத்தில் இளைஞர்களுக்கான பங்களிப்பே இல்லாமல் இருந்தது.  ஒட்டு மொத்தமாக இளைஞர் சமுதாயம் ஆட்சி அமைப்பிலிருந்தும் சமூக நிர்மாணத்திலிருந்தும் அந்நியமாகி வெளிநாடுகளில் குடி புகுந்தார்கள்.  முடியாதவர்கள் ஆட்சியாளர்களை சபித்தபடி இங்கேயே அந்நியர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.  பிள்ளைகளையாவது வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவது இவர்களின் கனவாக இருந்தது.

ஏதோ ஒரு கோபுர உச்சியிலிருந்தோ புத்திஜீவி இருக்கையிலிருந்தோ இதை நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை.  பக்கத்தில் உள்ள ஜப்பானுக்கோ சீனாவுக்கோ ஒருமுறை நீங்கள் ஒருமுறை சென்று பார்த்தால் தெரியும்.  அவ்வளவு கூட வேண்டாம், பக்கத்தில் உள்ள தாய்லாந்து போனால் தெரியும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்துப் பணமான பாட் நம்மூர் ஒரு ரூபாய்க்கு சமம்.  இன்று ஒரு பாட்டுக்கு இரண்டு ரூபாய்.

நானும் ஒரு நண்பரும் பட்டாயாவில் ஒரு செக்ஸ் க்ளப்புக்குப் போயிருந்தோம்.  ஒரு நடனமாது தனது ஜனன ஸ்தானத்தில் ஒரு கோக் போத்தலை வைத்து மூச்சை இழுத்தாள்.  கோக் அவள் “உள்ளே” போய் விட்டது.  காலி போத்தலை எங்களிடம் காண்பித்தாள்.   பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் போத்தலை அதே “இடத்தில்” வைத்தாள்.  போத்தல் கோக்கால் நிரம்பியது.  உங்களில் யாருக்காவது இது கோக் இல்லை என்று சந்தேகம் இருந்தால் குடித்துப் பார்க்கலாம்.  கோக் இல்லை என்றால் நான் உங்களோடு ஒரு நாள் தங்குகிறேன் என்று சவால் விட்டாள்.  யாரும் தயாராக இல்லை.  நண்பர் சொன்னார்.  ஒரு Bhat-உக்கு இரண்டு ரூபாய் என்று நம் ரூபாய் மதிப்பைக் குறைத்த அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்தக் கோக்கைக் கொடுக்கலாம்.

தாய்லாந்தின் ஒவ்வொரு கிராமமும் Lutyen’s Delhi-யைப் போல் இருக்கிறது.  புரியவில்லையா?  இங்கே சென்னையில் உள்ள போட் க்ளப் என்பது மில்லியனர்கள் வாழும் பகுதி.  அப்படி இருக்கிறது தாய்லாந்தின் கிராமங்கள்.  மிக நேர்த்தியான சாலைகள்.  குப்பை என்பதையே பார்க்க முடியவில்லை.  ஒவ்வொரு விவசாயியும் ட்ராக்டர் வைத்திருக்கிறான்.  அங்கேயும் ஏழ்மை இருக்கிறது.  ஏராளமான செக்ஸ் ஒர்க்கர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் நம் நாட்டு ஏழ்மைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.

இந்தியாவின் அவலங்களில் ஒன்று இங்குள்ள இடதுசாரி புத்திஜீவிகள்.  அவர்களுக்கு இந்தியாவின் எதார்த்தமே தெரியவில்லை.  இதை கடந்த பாராளுமன்றத் தேர்தல் நிரூபித்தது.  மோடி படு தோல்வி அடையப் போவதாக இவர்கள் உளறிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு இடதுசாரி மோடி ஜெயித்தால் நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வாய்ச் சவடால் அடித்தார்.   ”இந்தியா ஒரு பிச்சைக்கார நாடாக ஆனாலும் பரவாயில்லை.  இந்தியர்கள் வறுமையில் செத்தாலும் பரவாயில்லை.  ஆளும்கட்சிக்காரன் 60,000 கோடி ஊழல் செய்தாலும் பரவாயில்லை.  எனக்கு பிஜேபி வரக் கூடாது” என்று சொல்லிக் கொண்டிருந்த அறிவாளிகள் அவர்கள்.

இந்தச் சூழ்நிலையில் ராஜாஜி நடத்திய ஸ்வராஜ்யா இதழ் – ஆங்கிலத்தில் – TR Vivek-ஐ எக்ஸிக்யூட்டிவ் எடிட்டராகக் கொண்டு விரைவில் வெளிவர இருக்கிறது.  இதில் நானும் ஒரு பத்தி எழுத இருக்கிறேன்.  தெஹல்காவுக்கு ஒரு மாற்று இல்லையே என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஸ்வராஜ்யா அதைப் பூர்த்தி செய்யும் வைக்கும் என்று நம்புகிறேன்.  ஸ்வராஜ்யா எந்தக் கட்சியையும் சாராத ஒரு வலதுசாரிப் பத்திரிகை.

ஸ்வராஜ்யா குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.  முதல் இதழைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Comments are closed.