படித்ததில் பிடித்தது

இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களையெல்லாம் படிக்கும் போது எனக்கு ஒரு அடங்காக் கோபம் ஏற்படும்.  ஒருத்தருக்காவது இந்திய வாழ்வின் அவல நிலை பற்றி எந்தக் கோபமும் இல்லையா என்பதே அந்தக் கோபத்தின் காரணம்.  சாக்கடையில் உழலும் பன்றிகளின் போன்ற வாழ்க்கை இந்திய வாழ்க்கை.  அதற்கு அரசியல்வாதிகளே முதல் காரணம்.  தண்ணீர், மருத்துவமனை, சாலை வசதி, கல்வி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கொடூரமான இந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளனுக்காவது கோபம் இல்லையா … Read more

படித்ததில் பிடித்தது…

நம் வாசகர் வட்டத்தில் பிரவீன் என்ற நண்பர் எழுதியிருந்தது இது: சாரு, நான், நண்பர் ப்ரவீன் வெங்கடேஷ் மற்றும் சில நண்பர்கள் வேலை முடித்துக்கொண்டு மாலையில் ஒன்றுகூடி பேசிக்கொள்வோம். பேச்சு என்றால் அதில் அரசியல், மருத்துவம், பொழுதுபோக்கு, இலக்கியம், மக்கள் என பல விஷயங்களை ஆராய்வோம். எங்கள் குழுவில் மூத்தவர், இளைஞர்கள் என்ற எந்த பாகுபாடுமின்றி சந்தோஷமாய் இருக்கும். குழுவில் 50 வயதை கடந்த ராமலிங்கம், முனுசாமி போன்றோரும் உண்டு, 23,25 வயதுடைய நாங்களும் உண்டு. முனுசாமி … Read more

தமிழ் ஹிந்துவில் நேர்காணல்

இதுவே தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நேர்காண்லின் இணைப்பு: http://tamil.thehindu.com/general/literature/10-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article6049323.ece

தமிழ் இந்துவில்…

இன்றைய தமிழ் இந்து தினசரியில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வந்துள்ளது.  நண்பர்கள் பார்க்கவும். நாளைய நீயா நானாவில் இசைக் கருவிகள் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்டிருக்கிறேன்.  ஒரே ஒரு இடத்தில் பசியினாலும் தூக்கக் கலக்கத்தினாலும் ஸாக்ஸஃபோன் பற்றிப் பேசும் போது கென்னி ஜி பெயரை மறந்து விட்டேன்.

அற்புதன்…

பல கவிதைத் தொகுப்புகளைக் கொடுத்த புகழ் பெற்ற கவிஞன்.  ஏகப்பட்ட வாத்தியக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவன்.  ஜாஸ் இசைக் கலைஞன்.  பியானோவில் அற்புதங்கள் கொடுத்தவன்.  பெத்ரோ அஸ்நார்.  Pedro Aznar.  அர்ஹெந்த்தினா.  பழங்களில் எனக்கு ஆகப் பிடித்தது நாவல் பழம்.  இசைக் கருவிகளில் பியானோ.  அஸ்நாரின் மயக்கும் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.  நமது நாடி நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்கும் பியானோவை இசைத்தவாறு பாடுகிறான் அஸ்நார். https://www.youtube.com/watch?v=ScSt2GGFoQw    

விடிவெள்ளி

தென்னமெரிக்காவிலிருந்து நமக்கு கார்ஸியா மார்க்கேஸ், பாப்லோ நெரூதா போன்ற ஒரு சிலரைத் தெரிந்தாலும் தென்னமெரிக்க கண்டம் முழுக்கவுமே இந்தியாவில் அறியப்படாத இடமாகவே இருக்கிறது.  முக்கியமாக அவர்களின் சினிமா மற்றும் இசை.  ஃபாபியானா காந்த்திலோ (Fabiana Cantilo) அர்ஹெந்த்தினாவில் எனக்குப் பிடித்த பாடகி.  அவரது எளிமை வசீகரமானது.  ஒயின் அருந்திக் கொண்டே மிகத் தனிமையாகக் கேட்க அற்புதமான அனுபவம் தரும் பாடகி…   கொஞ்சம் நேரம் உங்கள் இசைக் கடவுளை மறந்து விட்டுக் கேட்டுப் பாருங்கள்…   இந்தப் பாடலின் பெயர் … Read more