ஒரு பேய்க் கதை

முகநூலில் செல்வகுமார் எழுதியிருந்த பேய்க் கதை இது.  கதையில் வரும் நண்பனின் பெயர் அராத்து என யூகிக்க முடிகிறது.  கதை சொல்பவரின் பெயரைத்தான் யூகிக்க முடியவில்லை.  ஏனென்றால், பலருடைய வீடுகளில் இப்படி நடந்திருப்பதாகக் கேள்விப் படுகிறேன்.  சரி, உயிர்மையில் சென்ற மாதம் வந்த என்னுடைய பேய்க் கதையைப் படித்தீர்களா? பேய்க் கதை / செல்வகுமார் ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் … Read more

எஜமானுக்கு நன்றி…

இன்று நீங்கள் கொண்டாடும் சாருவை உருவாக்கியது இம்மாதிரி சூஃபி இசை தான். என் குருதியில் ஓடுவது இம்மாதிரி சூஃபி இசை தான்.  நாகூர் எஜமானுக்கு நன்றி… https://www.youtube.com/watch?v=w1sqYgnwEqI&feature=kp  

குட்டிக் கதை : நிர்மல்

இந்த ஆண்டு புத்தக விழாவில் அராத்துவோடு சேர்ந்து நிர்மலும் கலக்கப் போகிறார்.  சந்தேகம் இல்லை.  பின்வரும் குட்டிக் கதை – பாட்டி கதை என்றும் சொல்லலாம் – நிர்மல் எழுதியது. ஒரு ஊர்ல ஒரு வீட்ல ஒரு பாட்டி இருந்திச்சாம்.  அது வெத்தலையில தடவின சுண்ணாம்பு மீதியை அதன் கை விரலால் எப்பொழுதும் சுவற்றில் தடவுமாம். பாட்டி செத்துப் போயி பல வருஷம் கழிச்சி பாட்டி இருந்த வீட்டுக்கு வந்த கம்ப்யூட்டர் பேரன்  பைனரி டிஜிட்டுகளால் பாட்டி … Read more

ஆற்றங்கரைக் கதைகள் : நிர்மல்

நம் வாசகர் வட்டத்திலிருந்தே பத்துப் பனிரண்டு எழுத்தாளர்களின் தொகுப்புகளை அடுத்த புத்தக விழாவின் போது வெளியிடலாம் போல் தெரிகிறது.  புதிய எழுத்தாளர்கள் என்றால் பதிப்பகம் தான் பிரச்சினை.  வாசகர் வட்டத்தின் மூலமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்து விடலாமா என்று தோன்றுகிறது.  ஆனால் என்னுடைய புத்தகங்களைக் கொடுக்க மாட்டேன்.  மன்னிக்கவும்.  இனியாவது என் புத்தகங்களை குறைந்த பட்சம் 20,000 பிரதிகள் விற்றுத் தர முடியும் பதிப்பகத்திடம் தான் கொடுப்பது என்று இருக்கிறேன்.  எனவே வாசகர் வட்டத்துக்கு என் நாவல் … Read more

ஞானத் தந்தையும் ஸாண்ட்விச் சீடனும்…

சுமார் ஒரு இருபது இளைஞர்களுக்காவது நான் ஞானத் தந்தையாக இருக்கிறேன்.   ஒரு அம்மாவுக்கு டஜன் குழந்தைகள் இருந்தாலும் விசேஷமாக  ஒரு குழந்தையின் மீது அதீத பாசம் இருக்கும் அல்லவா, அப்படி ஒரு இளைஞன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  பெயர்  மாடசாமி என்று வைத்துக் கொள்வோம்.  மாடசாமியின் மீது நான் விசேஷ கவனம் கொண்டிருப்பது அவனுக்குத்தான் துன்பமாக இருந்ததே தவிர எனக்கு அல்ல.  கோவாவில் தருணை சிறையில் சந்தித்து விட்டு அறைக்கு வந்து தனியாக … Read more

தி இந்துவில் ஒரு விவாதம்…

என் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அந்தக் கருத்தை அந்தக் கணமே மாற்றிக் கொள்ள எப்போதுமே தயாராக இருப்பவன் நான்.  இணையத்தில் எழுதுபவர்களிடம் என்னால் நல்ல தமிழைப் பார்க்க முடியவில்லை.  அராத்து கூட விதி விலக்கு அல்ல.  அராத்துவின் கருத்துக்களும் பார்வைகளும் உள்ளடக்கமும் அபாரமான வீச்சு கொண்டவை என்றாலும் அவருடைய மொழி இன்னும் மாற்றம் அடைய வேண்டும்.  தேவையில்லாத ஆங்கிலக் கலப்பு இன்றைய இணைய எழுத்தாளர்களின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.    நல்ல தமிழ் எழுதக் … Read more