சில அறிவிப்புகள்

நாளைய தினம் (14.1.2014) மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை புதுயுகம் தொலைக்காட்சி சேனலில் சொல்லி அடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.  முடிந்தால் பாருங்கள். நாளை மறுநாள் (15.1.2014) நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். (ஒன்றுமில்லை, மனுஷ்ய புத்திரனின் பாதிப்பு) இன்றைய குங்குமம் இதழில் என் பேட்டி வெளிவந்துள்ளது.  அதில் ஜெயமோகன் பற்றிய என் பதிலில் ஒரு பிழை ஏற்பட்டுள்ளது.  அவருடைய வாசிப்பு பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.  ஒவ்வொருவருடைய வாசிப்பும் அவரவரது சொந்த … Read more

தலைமுறைகள்

இம்மாத உயிர்மையில் வந்த சாருவின் “தலைமுறைகள்” விமர்சனம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் வந்த சில வரிகளை சாதாரணமாகக் கடந்து வந்துவிட முடியவில்லை. “தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள். நதியையும் நிலவையும் தாவரங்களையும் இழந்துபோன ஒரு தலைமுறையை இன்றைய நவீன நகரத்து வாழ்க்கை உருவாக்கி இருக்கிறது.” எத்தனை சத்தியமான உண்மை. எங்களின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது அய்யனார் கோவில் ஆறு. உள்ளங்கையில் நீரை அள்ளிக்கொண்டால் முகம் பார்த்துத் தலை வாரலாம். அவ்வளவு தூய்மை. அவ்வளவு தண்மை. பள்ளி … Read more

அடுத்து செய்ய வேண்டியவை…

சாரு ஆன்லைன் அமைதியாக இருக்கிறது என்றால் நான் கடும் வேலையில் இருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  ஏப்ரலில் இப்போது நான் எழுதி முடித்துள்ள நாவலின் வெளியீட்டு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும்.  கொள்ளளவு 3500.  நாவல் 1300 பக்கம்.  இப்போதைக்கு.  செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  பல இடங்களை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.  சற்றே விரிவாக்கினால் நாவல் 2000 பக்கம் வந்து விடும்.  ஒரு நாளில் இருநூறு பக்கம் என்று கணக்கிட்டு செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  பதிப்பாளரிடம் … Read more

ஒரு பேரழகியின் உன்னத சங்கீதம்

இன்று காலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சவூதி வாசகர் ராம ஸ்ரீனிவாசன் அனுப்பியிருந்த இந்த இணைப்பைப் பார்த்தேன்.  அற்புதமான குரல்.  அருமையான சங்கீதம்.  ஆனால் கண்களைத் திறந்தபடி கேட்டால் செவிகள் அந்த அருமையான சங்கீதத்தைக் கேட்க மறுக்கின்றன.  கண்களை மூடிக் கொண்டு தான் கேட்க வேண்டியிருக்கிறது.  இப்படிப்பட்ட பேரழகிகள் தான் இந்தப் பூவுலகை இன்னமும் ரசிக்கத்தக்கதாக மாற்றுகிறார்கள்.  இவருக்கு (சங்கீதத்துக்கு என்று பாட பேதம்) அடிமையாகி விட்டேன். https://www.youtube.com/watch?v=1hWAOReJehw

சில ஆலோசனைகள்

  நான் சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் மற்றும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறேன்.  கேட்டால் அராத்து ஃபேஸ்புக்கிலேயே இருந்து புத்தகம் எழுதி விட வில்லையா என்று கேட்கிறார்கள்.  எப்போதுமே நிபுணர்களை உதாரணமாகக் கொள்ளாதீர்கள்.  சர்க்கஸில் கயிற்றில் நடக்கிறார்கள் என்றால் நீங்களும் கயிற்றில் நடப்பீர்களா?  மது அடிமை, கஞ்சா அடிமை போல் அல்லது அதைவிடவும் தன்னை உபயோகிப்பவர்களை அடிமைப் படுத்தும் குணம் உடையது ஃபேஸ்புக்.  நீங்கள் ஃபேஸ்புக்கிலேயே இருந்தால் எதையுமே படிக்க முடியாது.  உங்கள் … Read more