ரௌத்ரம் பழகு…

ஒரு மனிதர் என்னை அவன் இவன் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டுத் திட்டிய போது அதை சிரித்துக் கொண்டே புறந்தள்ளி விட்டேன் என்பதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் கவனித்திருப்பீர்கள்.  ஆனால் என்னுடைய அமைதி பலகீனம் அல்ல. மகாத்மா காந்தி அடிக்கடி சொல்வார் அல்லவா, அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல என்று.  அதைப் போல்தான் அமைதியும். என் எழுத்தைப் படித்தவர்களுக்கும் என்னோடு பழகியவர்களுக்கும் தெரியும், என்னைப் பாராட்டினால் பதிலுக்கு அவர்களைப் பாராட்ட மாட்டேன் என்று.  பாராட்டத் தகுதி … Read more

nothing else matters…

ஏற்காடு பயணம் இனிதே முடிந்தது.  சென்னையிலிருந்து நானும், அராத்துவும், நடிகர் பார்த்திபனும், அவரது உதவியாளர் ஒருவரும் சென்றிருந்தோம்.  பல நண்பர்கள் ஸ்டோரி டிஸ்கஷனா என்று கேட்டார்கள்.  என் சினிமா உலக நண்பர்கள் என்னோடு என்றுமே சினிமா சம்பந்தமாகப் பேசியதில்லை.  ஒரே விதிவிலக்கு கௌதம் மேனன்.  கௌதம் மேனனும் பார்த்திபனும் மிக நன்றாகப் பழகும் நண்பர்கள்.  ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா பார்க் ஓட்டலில் நடந்த போது – ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு – கௌதம் … Read more

கடவுளின் பாதையில்…

வாசகர் வட்ட நண்பர்களின் இமாலயப் பயணம் முடிவாகி விட்டது.  நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் மட்டும் ஜீப்பில்.  மற்ற நண்பர்கள் மோட்டார் பைக்கில்.  இப்போது அங்கே மழை பெய்து என்னென்னவோ ஆகி இருக்கிறது.  இருந்தாலும் ஜூலை கடைசி வாரத்திற்குள் எல்லாம் சரியாகி விடும்.  நாங்கள் பத்து பேர் செல்கிறோம்.  இன்னொருவரும் வருகிறார்.  அவர் இருப்பதால் பயம் இல்லை.  அவர் கடவுள்.  கடவுளைக் காண, கடவுளின் பாதையில், கடவுளோடு ஒரு பயணம் இது. பயணத்தின் போது மது அருந்துவதில்லை … Read more

இறைவனுக்கு நன்றி…

இறைவனுக்கும், என் வாசகர் வட்ட நண்பர்களுக்கும், அவந்திகா மற்றும் கார்த்திக்குக்கும், என் மொழிபெயர்ப்பாளர்களுக்கும்  என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்… http://www.fondation-janmichalski.com/en

வர்றியா… வர்றியா…

ஃபேஸ்புக்கில் என் பெயர் மறுபடியும் இழுக்கப்பட்டிருக்கிறது.  தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு இவர்களோடெல்லாம் உரையாடிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை; முக்கியமாக நேரமும் இல்லை. மனுஷ்ய புத்திரன் திரு மு. கருணாநிதியை அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்திப் பேசினார் என்ற விஷயம் இணையத்தில் படு சூடான விவாதமாக மாறியது பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன்.  எனக்கு இதைப் படிக்கவோ இதில் கலந்து கொள்ளவோ விருப்பம் இல்லை; நேரம் இல்லை. … Read more