வாசகர் வட்ட நண்பர்களின் இமாலயப் பயணம் முடிவாகி விட்டது. நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் மட்டும் ஜீப்பில். மற்ற நண்பர்கள் மோட்டார் பைக்கில். இப்போது அங்கே மழை பெய்து என்னென்னவோ ஆகி இருக்கிறது. இருந்தாலும் ஜூலை கடைசி வாரத்திற்குள் எல்லாம் சரியாகி விடும். நாங்கள் பத்து பேர் செல்கிறோம். இன்னொருவரும் வருகிறார். அவர் இருப்பதால் பயம் இல்லை. அவர் கடவுள். கடவுளைக் காண, கடவுளின் பாதையில், கடவுளோடு ஒரு பயணம் இது. பயணத்தின் போது மது அருந்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். அது தேவையும் இல்லை. இப்போதிருந்தே மது, மாது, கர மைதுனம் போன்ற விஷயங்களை விலக்கி விடுமாறு நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். மலைப் பயணத்துக்கு உடம்பு அப்போதுதான் தோதாக இருக்கும். பயணத்தின் லீடர் கடவுள் என்றாலும் அவர் invisible ஆக இருப்பார் என்பதால் அராத்துவை அமர்த்தியிருக்கிறோம். எங்கள் பயண வழி பின்வருமாறு:
July 24’th
DAY 1 . Chennai to Chandigarh
DAY 2. Chandigarh to Shimla ( 130 Kms )
Day 3. Shimla to Sarahan ( 152 Kms )
DAY 4. Sarahan to kalpa ( 90 Kms )
சங்லா பள்ளத்தாக்கின் வழியாக… ( சமீபத்தில் நிலச்சரிவின் காரணமாக ஹிமாச்சல் முதலமைச்சர் சிக்கித் தவித்த இடம் )
DAY 5. Kalpa to Nako ( 104 Kms )
நாகோ-விலிருந்து 10கி.மீ தொலைவில் சீன எல்லை உள்ளது.
DAY 6. Nako to Kaza ( 110 Kms )
Via Tabo – உலகின் உயரமான கிராமம்.
The village is situated at an altitude of 10,760ft/ 3,280 metres
( Tabo is a small town in the Lahaul and Spiti district on the banks of the Spiti River in Himachal Pradesh, India. The town lies on the road between Rekong Peo and Kaza (alternative spelling: Kaja), the sub-divisional headquarters of Spiti. The town surrounds a Buddhist monastery which, according to legend, is said to be over a thousand years old. His Holiness the Dalai Lama has expressed his desire to retire to Tabo, since he maintains that the Tabo Monastery is one of the holiest. In 1996, HH the Dalai Lama conducted the Kalachakra initiation ceremony in Tabo, which coincided with the millennium anniversary celebrations of the Tabo monastery. The ceremony was attended by thousands of Buddhists from across the world )
DAY 7. Kaza to Losar ( 60 Kms )
இந்த பாதைகளில் சாலைகள் கிடையாது. கரடுமுரடான கற்களின் வழியாக பயணிக்க வேண்டும்.
DAY 8. Losar to Keylong ( 128 Kms )
July 31’st
DAY 9. Keylong to Sarchu ( 106 Kms )
சார்ச்சு என்பது ஊர் கிடையாது. மலை உச்சியில் சாலையோரத்தில் கூடாரங்கள் அமைத்திருப்பார்கள். அங்குதான் இரவு தங்க வேண்டும்.
Aug 1’st
DAy 10. Sarchu to Leh ( 250 Kms )
சார்ச்சு-விலிருந்து ‘ லே ‘ செல்லும் வழியில்,
Taglang La, elevation 5,328 metres (17,480 ft), is a high mountain pass in Ladakh region of the Indian state of Jammu and Kashmir.
The elevation in metres, which is taken from a local sign, is in agreement with SRTM data. The sign incorrectly claims 17582 feet, which would be 5359 metres, and incorrectly claims the world’s second highest motorable pass. It is reached via 21 Gata loops along the Leh-Manali Highway.
DAY 11. Leh
DAY 12. Leh
DAY 13. Leh to Srinagar Via Kargil
DAY 14.
August 6 : Srinagar to Chennai
Comments are closed.