தியாகராஜா
பெரும் சங்கீத ரசிகனான என் இளம் நண்பன் அவனுடைய வழக்கமான ‘சினிக்கல்’ தன்மையுடன் என்னிடம் இன்று மாலை சொன்னான்: “நீங்கள் தியாகராஜா நாவலை இத்தனைக் காலம் இழுத்துக்கொண்டிருப்பதன் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.” ”என்ன காரணம்?” ”ஔரங்ஸேப் பற்றி எக்கச்சக்கமான நூல்கள் உள்ளன. ஆனால் தியாகராஜாவின் வாழ்க்கை பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அதனால்தான் உங்களால் எழுத முடியவில்லை.” ”எழுத்தில் என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மட்டுமல்லாமல் தியாகராஜாவும் என்னைப் போல் ஒரு ஆட்டோஃபிக்ஷன் எழுத்தாளர்தான். … Read more