புத்தாண்டு வாழ்த்து

எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான். ஆனாலும் நீங்கள் அனைவரும் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுவதால் நானும் உங்கள் கொண்டாட்டத்தில் இணைகிறேன். இப்போது கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் செல்கிறேன். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anecdote

கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்ஜுனின் குறிப்பில் anecdote என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியது.  இதை என் தோழி எக்ஸிடம் (எக்ஸ் தோழி அல்ல; தோழி எக்ஸ்.  பெயர் சொல்லக் கூடாது அல்லவா, அதனால் இந்த ஏற்பாடு!) கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அர்ஜுனின் குறிப்பு வந்த ஃபேஸ்புக் பக்கத்தின் இணைப்பை அனுப்பினேன்.  ஏற்கனவே என் வீட்டுக்கு எதிரே இருக்கும் காந்தி நகர் க்ளப்புக்கு அருகில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்திருக்கிறேன், இனிமேல் … Read more