இன்று மதியம் பன்னிரண்டிலிருந்து இரண்டு வரை…

என்னடா இது, நலம்விரும்பிகள் சும்மா இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டேன். யாரோ ஒருத்தர் அவந்திகாவுக்கு ஃபோன் பண்ணி தடுப்பூசி போட்டு 28 தினங்களுக்குப் பிறகு இன்னொரு ஊசியும் போட்ட பிறகுதான் வேலை செய்யும். இப்போதே ஏன் சாருவை விட்டீர்கள் என்று சொல்லி விட்டார். அதனால் என் பரோல் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் காலில் கையில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (எண் 10-11) இருப்பேன். இரண்டு மணிக்குக் கிளம்பி விடுவேன்.

இன்னொரு முக்கிய விஷயம், நான் என்ன தடுப்பூசியை நம்பியா வெளியே கிளம்பினேன்? ஒரு வருடமாக நான் குடித்த கஷாயங்களை நம்பி அல்லவா கிளம்பினேன்?

வினித், நீங்கள் கொடுத்த தம்ரூட் காயத்ரி பையில் மாட்டி விட்டது. எஜமான் அதில் அவள் பெயரை எழுதியிருக்கிறார். எனக்கு மீண்டும் கொடுத்து அனுப்புவார்.