அன்புள்ள சாரு,
உங்களது சமீபத்திய கட்டுரை ஒன்றில் “ஆய்த எழுத்துவில்” என எழுதியிருப்பீர்கள். வெகுநேரம் வார்த்தை பிரயோகத்தின் நேர்த்தியில் தோய்ந்து கிடந்தேன்.
படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ஆயுத எழுத்தில் என தவறாக எழுதுவோர் அதிகம்.
அ−காலம் தொடரில் உங்களது தங்கமான தமிழ் நடையும் அற்புதமான தமிழும் தொழில் நுட்ப யுகத்துக்கு இறைசக்தியால் வழங்கப்பட்ட கொடை சாரு என நினைக்க வைக்கிறது ( தமிழில் கவனம் தேவை என இடையறாது கடிந்தும் இதமாகவும் சொல்லி வருகிறீர்கள். அதை சிரத்தையுடன் பின்பற்ற முயலும் அராத்துவின் தொடரும் நல்ல வாசிப்பனுபவம் தருகிறது. இந்த கண்டிப்புக்காக உங்களை எதிரியாக நினைப்பவர்கள் நிலைதான் பரிதாபம்)
உங்களை மன ரீதியான இஸ்லாமியன் என உணர்வதாக பல ஆண்டுகளாக குறிப்பிட்டு வருகிறீர்கள். இந்த தொடர்,இவ்வளவு அற்புதமாக அமைவதற்கு காரணம் இந்த உணர்வும் ஒரு காரணம் என கருதுகிறேன்லாக்டவுனில் படிக்க ஏதேனும் புத்தகங்களை பரிந்துரைக்க பலர் கேட்பதுண்டு. நீங்களோ வாழ்நாள் முழுக்க படித்தாலும் முடித்துவிட முடியாத அளவுக்கு நூல்களை பரிந்துரைக்கிறீர்கள்.
கவிஞர் வாலி சொன்னதுபோல இப்படி ஒரு பொக்கிஷத்தை இவ்வளவு இலகுவாக யாரும் வழங்க முடியாது.
அமெரிக்கர்களின் கோணல் உச்சரிப்பும் அதற்கான உதாரணமும் புன்னகைக்க வைக்கின்றன அதற்கு முந்தைய வரிகள் கண் கலங்க வைக்கின்றனசாரு என்றால் இப்படித்தான் என யாரும் வரையறுத்துவிட முடியாதுமுடியவில்லைதான், ஆனாலும் உங்கள் வேகத்துக்கு நாங்களும் ஓடி வர முயல்கிறோம்.
அன்புடன்,
பிச்சைக்காரன்