வாசகர் வட்ட சந்திப்பு (2)

ஜூன் 6 மாலை ஆறரை மணிக்கு ஸூமில் வாசகர் வட்டச் சந்திப்பு நடக்க உள்ளது, வருகிறீர்களா என்று கேட்டிருந்தேன். எனக்கு முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் – இதுவரை ஒரு முறை கூட கடிதத் தொடர்பு இல்லாதவர்களைச் சொல்கிறேன் – கலந்து கொள்ளவா என்று கேட்கிறார்கள். அப்படி ஒருவரை “உங்களை எனக்குத் தெரியாதே?” என்று பதில் எழுதினேன். உடனே அவர், முன்பு ஒரு கடிதம் உங்களைத் திட்டி எழுதியிருந்தேனே என்று எழுதியிருக்கிறார். இப்படி இருக்கிறது உலகம். என் வாசகர் வட்ட நண்பர்கள் கருப்பசாமி, செல்வா, மனோ, ராஜா வெங்கடேஷ், கார்த்திக், குரு (லண்டன்), குமரேசன் எல்லாம் வட்டத்தில் இருக்கிறீர்களா? இல்லாவிட்டால் புது வட்டம் ஒன்று ஆரம்பிக்கவா? இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது விஷ்ணுபுரம் வட்டம். போய்ச் சேர்ந்து விடுவேன்.