என் தேர்தல் கணிப்பு பற்றி…

பின்வருவது யுவ கிருஷ்ணா தனது முகநூல் பக்கத்தில் எழுதியது…

இந்த தேர்தலைப் பொறுத்தவரை மோடியை விட Charu Niveditaதான் என்னை அதிகமாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

2011 தேர்தலின் போதும் திமுகவுக்கு 30 இடங்கள் கூட கிடைக்காது என்றார். உண்மையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ ஒப்பீனியன் போல் எடுத்திருந்தால் கூட திமுகவுக்கு அப்போது சற்று கூடுதல் இடங்களையே கொடுத்திருக்கும்.

சாரு சொன்னதுதான் நடந்தது.

ஒரு கூட்டத்தில் இதுகுறித்து சாருவிடம் கேட்டேன். “எப்படி சொன்னீர்கள்? ஜோசியமா?”

“இது நுண்ணுணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வரலாற்றிலேயே குறைவான இடங்களை பெறப்போகிறது. அது நூறுக்கும் மிகக்குறைவான இடங்களில்தான் வெல்லும்” என்று பதில் சொன்னார்.

சில நாட்களுக்கு முன்பாக திமுகவுக்கு இரண்டு இடம்தான் கிடைக்கும் என்றுகூட எழுதினார். அதிமுக மற்றும் பாஜக ஆதரவு ஊடகங்கள் கூட திமுகவுக்கு குறைந்தபட்சம் ஐந்து இடங்களை மனமுவந்து தந்தார்கள்.

அறிவியல்ரீதியாக எந்த கருத்துக் கணிப்பும் எடுக்காமல், தன்னுடைய உள்ளுணர்வின் அடிப்படையில் சாரு சொன்னதுதான் கிட்டத்தட்ட துல்லியமாக நடந்திருக்கிறது.

Comments are closed.