குயிலின் முதல் பாடல்

என் தெருவில் அடர்த்தியான மரங்கள் அதிகம்.  அதிகாலை நாலரை மணிக்கு குயிலின் முதல் பாடல் கேட்டுக் கண் விழிப்பேன்.  உடனே இஞ்சிச் சாறு குடித்து விட்டுக் கொஞ்ச நேரம் மின்னஞ்சல்.  இன்று ராஜகுரு என்ற வாசகரிடமிருந்து நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது.  படித்தேன்.  நீங்களும் அவசியம் படித்துப் பாருங்கள்.  நீங்கள் மறக்கவே முடியாத கட்டுரையாக அது இருக்கும்.  ஆங்கிலம் என்பதால் விட்டு விடாதீர்கள்.  அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போல் தான் எனக்கும் தருண் தேஜ்பாலுக்குமான நட்பு ஏற்பட்டது.  முழுக்க முழுக்க intellectual and  spiritual friendship.  நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உன்னைத்தான் காதலித்திருப்பேன் என்று சொன்னேன்.  அதே போன்றதான ஒரு நட்பை அன்னா அக்மதோவா, பெர்லின் என்ற எழுத்தாளரோடு உணர்ந்திருக்கிறாள் என்பதைப் படித்து இறும்பூது எய்தினேன்.  இந்தக் காலை நேரம் அற்புதமானது.  ராஜகுருவுக்கு நன்றி.  ஞாயிறு இன்னும் தலைகாட்டாததால் குயிலின் பாடல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

http://www.nytimes.com/2014/05/02/opinion/brooks-love-story.html?smid=fb-share&_r=0

Comments are closed.