Just read your article about writer Sujatha shouting at you and MD Muthukumaraswami.Now Mr.Muthukumaraswami has clarified in his status as below:
நான் எனக்கே தெரியாமல் எழுத்தாளர் சுஜாதாவை இருபது வருடங்களுக்கு முன்பு நண்பர் சாரு நிவேதிதாவோடு போய் பார்த்தேன் என்று அவர் எழுதியிருக்கும் பதிவில் இருந்து தெரிந்துகொண்டேன். சாரு நிவேதிதாவின் கட்டுரைத் தொகுப்பு ‘கனவுகளை மொழிபெயர்த்தவன்’ பக்கம் 67-இல் சாரு சுஜாதாவை சென்று சந்தித்த சம்பவம் எழுதப்படுள்ளது. அதில் இல்லாத நான் இப்போது எப்படி திடீரென்று முளைத்தேன் என்று தெரியவில்லை. சுஜாதாவை நான் ஒரே ஒரு முறை நண்பர்கள் ஜேடிஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ பட பிரிவ்யூவில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். அவர் சுந்தரராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு மலரில் வெளிவந்த என்னுடைய நாடகத்தைப் பற்றி சுபமங்களாவில் எழுதியிருந்த விமர்சனத்தைப் பற்றி சொன்னார். தொடர்ந்து நாங்கள் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்தோம். சாருவின் ஞாபகம் பிழைபட்டது.
So now what do you say? There were always comments about your creating up stories just to get publicity.Now it has been proved hand in glove.Ok let it be tha last..Hereafter stop creating stories like this that too about person who are long dead.You talk about God Anmeegam things like that.Its Indian culture not to criticize dead people.Stop doing these.Thanks..
nvivek51@gmail.com
எனக்குப் பொதுவாக ஆபாசக் கடிதம் எழுதி வரும் என்.விவேக் என்பவர் மேற்படி கடிதத்தை எழுதியிருக்கிறார். என் ஞாபகம் பிழைபட்டதுதான். ஆனால் அடி வாங்கும் தருணங்களையும் அவமானப்படும் தருணங்களையும் மறக்க முடியாது. அங்கே ஞாபகம் பிசகாது. எம்.டி.எம்.முக்கு அந்தக் காலகட்டத்தில் நடந்தது எதுவுமே இப்போது நினைவில் இருக்கும் வாய்ப்பு இல்லை. காரணம், மிகவும் அந்தரங்கமானது. மற்றவர்களின் அந்தரங்கங்களில் தலையிடும் தவறை நான் எப்போதுமே செய்ய மாட்டேன். அதிலும் அவர் என் முன்னாள் நண்பர். வேண்டாம். இதோடு விட்டு விடுவோம்.
மேலும் சுஜாதாவை வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் அளவுக்கு நான் கீழான நிலையில் இல்லை. ஏனென்றால், நான் பப்ளிசிட்டியை எப்போதுமே வெறுப்பவன். மேலும், தமிழ்நாட்டில் நீங்கள் எவ்வளவுதான் பப்ளிசிட்டி தேடினாலும் ஆயிரம் பிரதிகள்தான் விற்கும்.
Comments are closed.